» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் ஒரேநாளில் 159 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு !

வியாழன் 28, செப்டம்பர் 2023 11:41:26 AM (IST)

பாகிஸ்தானில் ஒரேநாளில் 159 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

பாகிஸ்தானில் கொசுக்கடி காரணமாக உண்டாகும் டெங்கு நோய் பாதிப்பு உயர்ந்து வருகிறது. நாட்டின் முக்கிய நகரங்களான ராவல்பிண்டி, முல்தான், பைசாலாபாத், குஜ்ரன்வாலாவில் டெங்கு பாதிப்பு நோயாளிகள் அதிகரித்து வருகிறார்கள். லாகூரில் மட்டும் இந்தாண்டு இதுவரை 1,511 பேர் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகினர்.

பாகிஸ்தானில் நேற்று ஒருநாள் மட்டும் புதிதாக 159 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இந்தாண்டு 3 ஆயிரத்து 849 ஆக உயர்ந்தது. நேற்று காலை நிலவரப்படி 151 பேர் டெங்கு மீட்பு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக ராவல்பிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் 70 பேர் சிகிச்சை பெறுகிறார்கள்.

பலர் நோயின் தாக்கத்தை கருத்தில் கொள்ளாமல் வீடுகளிலிருந்து கொண்டு சிகிச்சை பெறுவதாகவும் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளவும் சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory