» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ராட்டினத்தில் 75 அடி உயரத்தில் தலைகீழாக தொங்கிய மக்கள்: கனடாவில் பரபரப்பு !
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 5:20:02 PM (IST)

கனடாவில் உள்ள கேளிக்கை பூங்காவின் ராட்டினத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 75 அடி உயரத்தில் தலைகீழாக மக்கள் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள வாகான் நகரில் கனடா வொண்டர்லேண்ட் என்ற கேளிக்கை பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் லம்பெர்ஜேக் எனப்படும் 360 டிகிரி கோணத்தில் சுற்றக்கூடிய ராட்டினம் உள்ளது. இந்த ராட்டினத்தில் 48 பேர் ஒரே நேரத்தில் விளையாடலாம். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு 10.40(உள்ளூர் நேரம்) மணியளவில் மக்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு 75 அடி உயரத்தில் தலைகீழாக தொங்கியபடி நின்றதால் மக்கள் அச்சத்தில் கூச்சலிடத் தொடங்கினர்.
உடனடியாக தொழில்நுட்ப ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு ராட்டினத்தில் இருந்த கோளாறு சரிசெய்யப்பட்டது. சுமார் 25 நிமிடங்களுக்கு பிறகு 11.05 மணியளவில் ராட்டினத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர்.இதில், இருவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து பூங்கா நிர்வாகம் உடனடியாக சிகிச்சை அளித்தது. மீதமுள்ள மக்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த விபத்தை தொடர்ந்து கேளிக்கை பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவை தாக்கிய சக்திவாய்ந்த புயல்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
திங்கள் 11, டிசம்பர் 2023 11:44:25 AM (IST)

இத்தாலியில் மருத்துவமனையில் தீ விபத்து: 4 நோயாளிகள் உயிரிழப்பு
ஞாயிறு 10, டிசம்பர் 2023 10:52:46 AM (IST)

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் 17 ஆயிரம் பேர் உயிரிழப்பு! 42 ஆயிரம் பேர் காயம்!
சனி 9, டிசம்பர் 2023 5:54:24 PM (IST)

ரஷியா அதிபா் தோ்தலில் மீண்டும் போட்டி விளாதிமீா் புதின் அறிவிப்பு!
சனி 9, டிசம்பர் 2023 10:25:30 AM (IST)

பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியம்: இஸ்ரேல் பிரதமருடன் ஜோ பைடன் பேச்சு!
வெள்ளி 8, டிசம்பர் 2023 11:34:21 AM (IST)

வடகொரிய பெண்கள் அதிக குழந்தைகளை பெற வேண்டும்: கண்ணீர் மல்க அதிபர் கோரிக்கை!
வியாழன் 7, டிசம்பர் 2023 11:51:21 AM (IST)
