» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தமிழில் உரையாடிய அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவேக் ராமசாமி!

செவ்வாய் 26, செப்டம்பர் 2023 4:02:50 PM (IST)அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரான விவேக் ராமசாமி, தமிழில் உரையாடும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார்.பிரதான எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் வேட்பாளர் போட்டியில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் தொழிலதிபர் விவேக் ராமசாமி(37) உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.

குடியரசு கட்சியின் வேட்பாளர் போட்டியில் உள்ள விவேக் ராமசாமி பல்வேறு தரப்பினரை சந்தித்து தேர்தலுக்கான ஆதரவை திரட்டி வருகிறார்.இந்த நிலையில், பொதுமக்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு ஒன்றில் விவேக் ராமசாமி பங்கேற்று இருந்தார். அப்போது விவேக் ராமசாமியிடம் பேசிய தமிழகத்தை பூர்விகமாக கொண்ட ஒருவர், "அடுத்த அதிபராக உங்களை பார்க்க விரும்புகிறேன். அதற்காக வாழ்த்துகள். எனது பெற்றோரும் தமிழ்நாட்டை சார்ந்தவர்கள்” எனத் தெரிவித்தார்.

உடனடியாக "நானும் தமிழ் பேசுவேன், பாலக்காடு தமிழ்” என்று தமிழில் சிரித்தபடி அவர் பதிலளித்தார். விவேக் ராமசாமியின் ட்விட்டர்(எக்ஸ்) பக்கத்தில் பகிரப்பட்ட இந்த காணொலி வைரலாகி வருகின்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory