» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சிங்கப்பூர் நாட்டின் 9வது அதிபராக தர்மன் சண்முகரத்னம் பதவியேற்பு!

வெள்ளி 15, செப்டம்பர் 2023 5:37:17 PM (IST)சிங்கப்பூரின் 9-வது அதிபராக தர்மன் சண்முகரத்னம் பதவியேற்றார்.

சிங்கப்பூரில் கடந்த 1-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவருடன் போட்டியிட்ட சீன வம்சாவளி வேட்பாளர்களான கொக் சாங்க் 15.72 சதவீத வாக்குகளும் கின் லியான் 13.88 சதவீத வாக்குகளும் பெற்றனர்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சிங்கப்பூரின் 9-வது அதிபராக தர்மன் சண்முகரத்னம் பதவியேற்று கொண்டார். அவருக்கு சிங்கப்பூர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுரேஷ் மேனன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  தர்மன் சண்முகரத்னம் இதற்கு முன், சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதிமந்திரி, கல்வி மந்திரி, துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory