» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இம்ரான் கானை மார்ச் 16 வரை கைது செய்ய தடை : இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 14, மார்ச் 2023 4:34:00 PM (IST)
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை வரும் 16-ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விசாரணையில் ஆஜராக இம்ரான்கான் விலக்கு கேட்டு இருந்தார். ஆனால் அவருக்கு கோர்ட்டு விலக்கு அளிக்கவில்லை. இந்த வழக்கு விசாரணையில் அவர் ஆஜராகாமல் இருந்து வருகிறார். இதற்கிடையே இவ்வழக்கு நேற்று இஸ்லாமாபாத் மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது இம்ரான்கானுக்கு நீதிபதி பிடிவாரண்டு பிறப்பித்தார். அவரை கைது செய்து வருகிற 29ம் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இந்தநிலையில் லாகூரில் இன்று தேர்தல் பேரணி இம்ரான்கான் தலைமையில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இம்ரான் கானை இன்று கைது செய்ய இஸ்லாமாபாத் போலீசார் ஹெலிகாப்டர் மூலம் லாகூரில் உள்ள அவரது வீடு அருகே உள்ள பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு சிறப்பு போலீஸ் படையினர் இம்ரான்கான் வீடு இருக்கும் சாமர் பார்சி பகுதிக்கு சென்று அவரை கைது செய்ய திட்டமிட்டனர்.
இந்தநிலையில் இம்ரான் கானுக்கு எதிராக விதிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த கோர்ட் பிடிவாரண்ட்டை ரத்து செய்து இம்ரான் கானை வருகிற 16ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஷ்யாவை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ரூ.2,893 கோடிக்கு ஆயுதங்கள்: அமெரிக்கா முடிவு!
செவ்வாய் 21, மார்ச் 2023 5:23:22 PM (IST)

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து பின்லாந்து முதலிடம்: இந்தியா..?
செவ்வாய் 21, மார்ச் 2023 3:42:22 PM (IST)

கரோனா தரவுகளில் வெளிப்படைத் தன்மை இல்லை: சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
ஞாயிறு 19, மார்ச் 2023 8:04:38 PM (IST)

போர்க் குற்றத்தைப் புரிந்ததாக புதினுக்கு எதிராக பிடிவாரண்ட் : பைடன் வரவேற்பு
சனி 18, மார்ச் 2023 4:37:40 PM (IST)

உக்ரைனில் ரஷியா குண்டு வீச்சு: 30 குடியிருப்பு கட்டிடங்கள் சேதம், ஒருவர் உயிரிழப்பு!
வெள்ளி 17, மார்ச் 2023 12:17:09 PM (IST)

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேர் விடுதலை
வெள்ளி 17, மார்ச் 2023 11:46:39 AM (IST)
