» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வங்கி ஊழியர்கள் செப்.11-ல் வேலைநிறுத்தம்: 4 நாட்கள் வங்கிச் சேவைகள் முடங்கும் அபாயம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 3:51:02 PM (IST)

வாரத்தில் 5 நாட்கள் பணி முறையை அமல்படுத்தக் கோரி வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதனால் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிச் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
9 வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் இணைந்த ஐக்கிய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு (UFBU) சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் இமுடிவு எடுக்கப்பட்டுள்ளது.
• 5 நாட்கள் பணி கோரிக்கை: வாரத்திற்கு 5 நாட்கள் வேலை என்ற கோரிக்கையை கடந்த 2024 மார்ச் 8-இல் நடந்த இருதரப்பு கூட்டத்தில் இந்திய வங்கிகள் சங்கம் (IBA) ஏற்றுக்கொண்டது. அதற்குப் பதிலாக திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பணிநேரத்தை 40 நிமிடங்கள் அதிகரிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.
• மத்திய அரசின் தாமதம்: இதற்கான பரிந்துரை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் எந்த முடிவும் எடுக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.
• செயல்திறன் ஊக்குத்தொகை எதிர்ப்பு: 4-ஆம் நிலை மற்றும் அதற்கு மேற்பட்ட அதிகாரிகளுக்கான செயல்திறன் அடிப்படையிலான ஊக்குத்தொகை திட்டத்தையும் சங்கங்கள் எதிர்த்துள்ளன.
தொடர் போராட்டங்கள் அறிவிப்பு:
செப்டம்பர் 11 வேலைநிறுத்தத்திற்குப் பிறகும் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது:
1. செப்டம்பர் 28 முதல்: 3 நாட்கள் தொடர் வேலைநிறுத்தம்.
2. அக்டோபர் 26 முதல்: காலவரையற்ற வேலைநிறுத்தம்.
தொடர்ந்து 4 நாட்கள் வங்கி சேவைகள் பாதிப்பு:
செப்டம்பர் 11 (வியாழன்) அன்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டால், அதனைத் தொடர்ந்து:
• செப்டம்பர் 12 (சனி): 2-வது சனிக்கிழமை விடுமுறை
• செப்டம்பர் 13 (ஞாயிறு): வாராந்திர விடுமுறை
• செப்டம்பர் 14 (திங்கள்): விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை
எனவே, செப்டம்பர் 11 முதல் 14 வரை தொடர்ந்து 4 நாட்கள் வங்கிச் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெரு நாய்களைக் கருணைக்கொலை செய்ய கேரள அரசு அனுமதி: வழிகாட்டுதல்கள் வெளியீடு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 3:46:58 PM (IST)

தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறப்பதில் என்ன பிரச்சனை? கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:59:02 AM (IST)

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026: கேரளாவைச் சேர்ந்த காசியா லிஸ் மேஜோ மகுடம் வென்றார்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:52:44 AM (IST)

ராக்கெட், செயற்கைக்கோள் தயாரிப்பைத் தனியாரிடம் ஒப்படைக்க இஸ்ரோ முடிவு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 4:57:53 PM (IST)

இந்தியா உலகின் கப்பல் கட்டுமான மையமாக உருவாகும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 10:58:05 AM (IST)

வாழும் கலை அமைப்புக்கு விதித்த ரூ. 5 கோடி அபராதம் ரத்து: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 22, ஆகஸ்ட் 2026 5:43:01 PM (IST)








