» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியா உலகின் கப்பல் கட்டுமான மையமாக உருவாகும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 10:58:05 AM (IST)
இந்தியா உலகின் முக்கிய கப்பல் கட்டுமான மையமாக உருவாகும் திறன் கொண்டது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
மேற்கு வங்காளத்தில் சுமார் ரூ.3,500 கோடி மதிப்பிலான 5 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடந்தது. மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் என்ஜினீயர்ஸ் (ஜி.ஆர்.எஸ்.இ.) கப்பல் கட்டும் தளம். மற்றும் யந்திரா இந்தியா நிறுவனத்தின் 5 விரிவாக்கத் திட்டங்கள் இதில் அடங்கும். அடிக்கல் நாட்டிய பின்னர் ராஜ்நாத் சிங் பேசும்போது கூறியதாவது: கப்பல் கட்டுமான தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கேற்ப புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ளும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. பாரம்பரியமாக கப்பல் கட்டுமானத்தில் முன்னணியில் உள்ள நாடுகள் உற்பத்தியைக் குறைத்து வருகின்றன.
நாட்டில் அதிகளவிலான தொழிலாளர்கள், உருக்கு நிறுவனங்கள் மற்றும் புதிய தொழில் நுட்பங்களை ஏற்றுக்கொள்ளும் திறன் இருப்பதால் இந்தியா இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முடியும். இதன் மூலம் இந்தியா உலகின் கப்பல் கட்டுமான மையமாக மாற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
ஜி.ஆர்.எஸ்.இ. நிறுவனம் ஹூக்ளி ஆற்றின் இருபுறங்களிலும் 2 சிறிய கப்பல் கட்டும் தளங்களையும், ராய்சாக்கில் 32 ஏக்கர் பரப்பிலான இடத்தையும் குத்தகைக்கு எடுத்துள்ளது. இதில் ரூ.2,500 கோடிக்கு மேல் முதலீடு செய்து கப்பல் கட்டுமான மையம் அமைக்கப்பட உள்ளது.
இதேபோல யந்திரா இந்தியாவின் இஷாபூரில் ரூ.750 கோடிக்கு மேல் முதலீட்டில் 2 புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இந்தத் திட்டங்கள் வேலைவாய்ப்பையும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கி ஊழியர்கள் செப்.11-ல் வேலைநிறுத்தம்: 4 நாட்கள் வங்கிச் சேவைகள் முடங்கும் அபாயம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 3:51:02 PM (IST)

தெரு நாய்களைக் கருணைக்கொலை செய்ய கேரள அரசு அனுமதி: வழிகாட்டுதல்கள் வெளியீடு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 3:46:58 PM (IST)

தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறப்பதில் என்ன பிரச்சனை? கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:59:02 AM (IST)

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026: கேரளாவைச் சேர்ந்த காசியா லிஸ் மேஜோ மகுடம் வென்றார்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:52:44 AM (IST)

ராக்கெட், செயற்கைக்கோள் தயாரிப்பைத் தனியாரிடம் ஒப்படைக்க இஸ்ரோ முடிவு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 4:57:53 PM (IST)

வாழும் கலை அமைப்புக்கு விதித்த ரூ. 5 கோடி அபராதம் ரத்து: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 22, ஆகஸ்ட் 2026 5:43:01 PM (IST)








