» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரூர் சம்பவத்தில் அரசு வேலை: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!

வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:41:00 PM (IST)

KaruruSuprem.jpg

கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு வழங்கிய பணி நியமனங்களை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, கருணை அடிப்படையில் அரசுப் பணிக்கான ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கியிருந்தார்.

இதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி நிர்வாகி தீரன் திருமுருகன், மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி சீனி அகமது உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வு, அரசு பணி நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், "அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது; எனவே மதுரை கிளையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டது.

இவ்வழக்கு இன்று (ஆகஸ்ட் 14) நீதிபதிகள் பர்திவாலா மற்றும் வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, "மாநில அரசு கருணை அடிப்படையில் பணி வழங்க விரும்பினால் உயர்நீதிமன்றத்திற்கு அதில் என்ன பிரச்சனை? வேலைவாய்ப்பு தொடர்பாகப் பொதுநல வழக்குத் தொடர முடியாது" என்று வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், பின்வரும் கேள்விகளையும் கருத்துகளையும் முன்வைத்தனர். அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது.  கருணை அடிப்படையில் பணி வழங்கக்கூடாது என்று கூற உயர்நீதிமன்றத்திற்கு என்ன உரிமை உள்ளது?

"பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி அவசியம். ஒரு துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் அரசு வேலையும் வழங்குவதில் என்ன பிரச்சனை இருக்கிறது? துயரச் சம்பவத்தில் குடும்பத்தின் ஒரே வாழ்வாதார உறுப்பினர் இறந்துவிட்டால், அரசு அவரது மகனுக்கோ மகளுக்கோ வேலை வழங்கக் கூடாதா? கரூர் நெரிசல் சம்பவம் என்பது ஒரு துயரச் சம்பவம்; இதில் அரசியல் செய்யக்கூடாது எனத் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory