» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மகாராஷ்டிராவில் பயங்கரம்: 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 9 பேர் உயிரிழப்பு!
வெள்ளி 31, ஜூலை 2026 12:36:48 PM (IST)

மகாராஷ்டிராவில் 4 மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டியில் 48 வீடுகளைக் கொண்ட 4 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. இக்கட்டிடத்தில் நேற்றிரவு சுமார் 11:30 மணியளவில் திடீரென ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறிய நிலையில், அடுத்த சில நிமிடங்களில் கட்டிடத்தின் மற்றொரு பகுதியும் முழுமையாக இடிந்து விழுந்து தரைமட்டமானது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF), தானே மாவட்ட பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை காயமடைந்த சிறுவன் ஒருவன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
நகராட்சி நிர்வாகம் விளக்கம்:
இச்சம்பவம் குறித்து பிவாண்டி நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் தெரிவிக்கையில்: இந்த அடுக்குமாடி குடியிருப்பு மிகவும் பலவீனமாக இருந்ததால், இதனை ஆபத்தான வசிப்பிடம் என வரையறுத்து நகராட்சி நிர்வாகம் சார்பாக ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
நேற்றிரவு கட்டிடத்தில் விரிசல் விழுவதாகத் தகவல் கிடைத்ததும், நகராட்சி துணைக் ஆணையர் அரவிந்த் கோகரே தலைமையிலான குழுவினர் உடனடியாகச் சென்று வீடு வீடாகச் சென்று குடியிருப்பாளர்களை வெளியேற்றினர். பெரும்பாலான குடும்பங்கள் ஏற்கனவே காலியான நிலையிலும், மீதமிருந்த மக்களையும் அதிகாரிகள் விரைந்து வெளியேற்றியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
நகராட்சி எச்சரிக்கையையும் மீறி கட்டிடத்தில் சட்டவிரோதமாக மராமத்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் வெளியேறத் தவறியவர்கள் என மொத்தம் 9 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால் தொடர்ந்து அங்கே தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தில் பிரதமர் மோடியுடன் கனிமொழி எம்.பி. பங்கேற்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:40:09 PM (IST)

இது ரீல்ஸ் காலம்; குறுக்குவழி உங்களை முடக்கிவிடும்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:12:38 AM (IST)

காவிரி நீர் பிரச்சனை: கர்நாடக பந்த் அறிவிப்பு - பெங்களூருவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:58:31 AM (IST)

நோயல் டாடாவுடன் நிர்வாகக் கருத்து வேறுபாடு: டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் ராஜினாமா!
புதன் 12, ஆகஸ்ட் 2026 5:48:05 PM (IST)

உத்தரபிரதேசத்தில் போலி சான்றிதழ்கள் மூலம் வக்கீலாக பதிவு: 39 பேர் மீது போலீசார் வழக்கு
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:50:44 PM (IST)

தமிழகத்திற்குத் தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:40:58 PM (IST)







