» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
காவிரி அணைகளைப் பார்வையிட விஜய்க்கு ஹெலிகாப்டர் வசதி : கர்நாடக முதல்வர் தகவல்!
வியாழன் 30, ஜூலை 2026 11:23:37 AM (IST)

காவிரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடக் கோரும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை எதிர்த்துக் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகக் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாகக் காங்கிரஸ் தலைவர்களுடன் விவாதிக்க டெல்லி சென்றுள்ள கர்நாடகத் துணை முதல்வர் டி.கே. சிவகுமார், அங்குள்ள கர்நாடக பவனில் சட்ட நிபுணர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில், கர்நாடக அணைகளில் போதிய அளவு நீர் இருப்பு இல்லாததால், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டது.ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் டி.கே. சிவகுமார்: "தமிழகத்திற்குக் காவிரியில் தண்ணீர் திறக்கும்படி காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது.
ஆனால், நமது மாநிலத்தில் போதிய நீர் இல்லாததால், இந்த உத்தரவை எதிர்த்துக் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்யத் தீர்மானித்துள்ளோம். அட்வகேட் ஜெனரல், சட்ட நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கையைத் தயாரிக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழக முதல்வர் விஜய் என்னைச் சந்தித்துப் பேசுவதற்காக நமது தலைமைச் செயலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார். மேலும், அவர் என்னுடன் தொலைபேசி வாயிலாகவும் பேசினார். அவருக்கு வழங்க வேண்டிய அரசு மரியாதையை வழங்கிப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளேன். நமது மாநிலத்திற்கு வருகை தரும் விருந்தினர்களைக் கௌரவத்துடன் வரவேற்பது நமது கடமையாகும்.
அவரை வரவேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். காவிரியிலுள்ள அணைப் பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்யுமாறு விஜய்யிடம் கூறியுள்ளேன். அதற்குத் தேவையான ஹெலிகாப்டர் வசதியும் செய்து கொடுக்கப்படும். இங்குள்ள உண்மை நிலவரத்தை அவர் நேரில் அறிந்து கொள்ள வேண்டும். அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்." என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தில் பிரதமர் மோடியுடன் கனிமொழி எம்.பி. பங்கேற்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:40:09 PM (IST)

இது ரீல்ஸ் காலம்; குறுக்குவழி உங்களை முடக்கிவிடும்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:12:38 AM (IST)

காவிரி நீர் பிரச்சனை: கர்நாடக பந்த் அறிவிப்பு - பெங்களூருவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:58:31 AM (IST)

நோயல் டாடாவுடன் நிர்வாகக் கருத்து வேறுபாடு: டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் ராஜினாமா!
புதன் 12, ஆகஸ்ட் 2026 5:48:05 PM (IST)

உத்தரபிரதேசத்தில் போலி சான்றிதழ்கள் மூலம் வக்கீலாக பதிவு: 39 பேர் மீது போலீசார் வழக்கு
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:50:44 PM (IST)

தமிழகத்திற்குத் தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:40:58 PM (IST)







