» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கேரளத்தில் அதிர்ச்சி : மாணவர்களுக்குப் போதைப் பொருள் விற்ற 3 பெண் ஆசிரியைகள் கைது!
புதன் 29, ஜூலை 2026 11:01:41 AM (IST)

கோழிக்கோட்டில் பள்ளி வளாகத்தில் மாணவர்களைக் குறிவைத்து ரகசியமாகப் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 3 பெண் ஆசிரியர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரா அருகே பேராம்பிராவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணிபுரியும் பெண் ஆசிரியைகள், பள்ளி வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை செய்வதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, கோழிக்கோடு மாநகரக் காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், மாநிலத்தில் போதைப்பொருளுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் ‘ஆபரேஷன் துபான்’ சிறப்புத் திட்டத்தின் கீழ் பேராம்பிரா காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
காவல்துறையின் விசாரணையில், மருதோம்கரா பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா என்ற ஆசிரியைக்குச் சர்வதேசப் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர் இடைத்தரகராகச் செயல்பட்டு, பள்ளி மாணவர்களைக் குறி வைத்துப் போதைப்பொருட்களை விநியோகம் செய்து வந்துள்ளார்.
இதையடுத்து ஆசிரியை கீர்த்தனாவைக் கைது செய்த காவல்துறையினர், அவரைத் தனிப்படை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவரது வங்கிச் கணக்கு பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தபோது, அதே பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரியும் காவியா என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்களைத் தொடர்ந்து, இக்கடத்தல் நெட்வொர்க்கில் தொடர்புடைய குற்றோத்து பகுதியைச் சேர்ந்த நிஷ்மா (30) என்ற மற்றொரு ஆசிரியையையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவர் நேரடியாகப் போதைப்பொருளை விநியோகிக்காமல், கூகுள் பே உள்ளிட்ட ஆன்லைன் மூலம் பணத்தைப் பெற்றுக் கொண்டு, போதைப்பொருள் இருக்கும் இடத்தின் கூகுள் மேப் லொகேஷனை அனுப்பி நூதன முறையில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இவ்வழக்கில் இதுவரை மொத்தம் 3 பெண் ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மேலும் சில ஆசிரியர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தில் பிரதமர் மோடியுடன் கனிமொழி எம்.பி. பங்கேற்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:40:09 PM (IST)

இது ரீல்ஸ் காலம்; குறுக்குவழி உங்களை முடக்கிவிடும்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:12:38 AM (IST)

காவிரி நீர் பிரச்சனை: கர்நாடக பந்த் அறிவிப்பு - பெங்களூருவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:58:31 AM (IST)

நோயல் டாடாவுடன் நிர்வாகக் கருத்து வேறுபாடு: டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் ராஜினாமா!
புதன் 12, ஆகஸ்ட் 2026 5:48:05 PM (IST)

உத்தரபிரதேசத்தில் போலி சான்றிதழ்கள் மூலம் வக்கீலாக பதிவு: 39 பேர் மீது போலீசார் வழக்கு
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:50:44 PM (IST)

தமிழகத்திற்குத் தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:40:58 PM (IST)







