» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
வெள்ளி 17, ஜூலை 2026 12:31:26 PM (IST)

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் நாட்டின் முதல் ரயில் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்துள்ளார்.
ஹரியானா மாநிலம் ஜிந்த் - சோனிபட் இடையேயான 89 கி.மீ. தொலைவை இந்த ரயில் 2 மணி நேரத்தில் கடக்கும். 10 பெட்டிகளைக் கொண்ட இந்த ஹைட்ரஜன் ரயில், பன்முகப் பாதுகாப்பு அம்சங்களுடன் சுமார் 2,600 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரயில், 1,200 கிலோவாட் திறன் கொண்ட ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல உந்துவிசை அமைப்பின் (Fuel Cell) மூலம் இயங்குகிறது.
வழக்கமான மின்சார ரயில்களைப் போல மேல்நிலை மின்கம்பிகளில் இருந்து மின்சாரம் பெறாமல், ஹைட்ரஜன் - ஆக்ஸிஜன் வேதிவினை மூலம் ரயிலுக்குள்ளேயே மின்சாரத்தை உற்பத்தி செய்து இந்த ரயில் பயன்படுத்தும். மேலும், ஹைட்ரஜன் கசிவுகள், வெப்பம், தீப்பிழம்புகள் மற்றும் புகையை முன்கூட்டிக் கண்டறியும் பன்முகப் பாதுகாப்பு அமைப்புகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.
சென்னை ஐசிஎஃப் தயாரிப்பு: இந்தியாவில் தற்போது 99 சதவீதத்திற்கும் அதிகமான அகல இருப்புப் பாதை வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டப் பாய்ச்சலாக இந்த ஹைட்ரஜன் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் இந்த முதல் ஹைட்ரஜன் ரயில், சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனத்தில் (ICF) தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கர்நாடகாவில் என்கவுண்ட்டரில் 3 பேர் சுட்டுக்கொலை : வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் சூறை!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:36:06 AM (IST)

உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு முன் காவிரியில் தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடகா!
சனி 15, ஆகஸ்ட் 2026 12:22:04 PM (IST)

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா புதிய உயரம் தொடும் : சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி!
சனி 15, ஆகஸ்ட் 2026 12:02:22 PM (IST)

கரூர் சம்பவத்தில் அரசு வேலை: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:41:00 PM (IST)

எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடக்கம்: ரூ.175 கோடி வரிப்பணம் வீண்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 11:50:45 AM (IST)

மக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தில் பிரதமர் மோடியுடன் கனிமொழி எம்.பி. பங்கேற்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:40:09 PM (IST)









