» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ரயில் டிக்கெட் முன்பதிவு இனி எளிது: புதிய அம்சங்களுடன் பீட்டா பதிப்பு அறிமுகம்!
வியாழன் 16, ஜூலை 2026 11:31:47 AM (IST)
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) பயணிகளின் டிக்கெட் முன்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்தும் நோக்கில், பல்வேறு புதிய தொழில்நுட்ப மாற்றங்களுடன் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தின் பீட்டா பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போதுள்ள நிலவரப்படி 82 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலமாகவே டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். எனினும், தட்கல் முன்பதிவு நேரங்களின்போது ஏற்படும் சர்வர் குறைபாடுகள், கடினமான கேப்ட்சா குறியீடுகள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகளால் முன்பதிவு தோல்வி அடைவது குறித்துப் பயணிகள் தரப்பில் ரயில்வே நிர்வாகத்திற்குப் புகார்கள் அனுப்பப்பட்டன. இதனையடுத்து 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இணையதளம் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
புதிய பீட்டா பதிப்பின் 4 முக்கிய அம்சங்கள்:
புதிய பீட்டா பதிப்பானது டிக்கெட் முன்பதிவைத் தடையின்றிச் செய்யும் நோக்கில் 4 முக்கிய மேம்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது:
- முன்பதிவின் போது தேவையற்ற கேப்ட்சாக்கள் (Captcha), பாப்-அப்கள் (Pop-ups) மற்றும் கவனச்சிதறல்களை ஏற்படுத்தும் ஒளிரும் கிராபிக்ஸ் அம்சங்கள் நீக்கப்பட்டுள்ளன.
- பயணிகள் அனைத்து வகுப்புகளுக்குமான இருக்கை விபரங்களை ஒரே நேரத்தில் சரிபார்க்கும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.
- வேகமான செக்-அவுட் செயல்முறை மூலம் டிக்கெட் முன்பதிவிற்கான படிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
- பயணிகளின் விபரங்களைச் சேமித்து வைத்துக்கொள்ளும் வசதி உள்ளதால், அடுத்தடுத்த முன்பதிவுகளை விரைவாக மேற்கொள்ள முடியும்.
பயனர்கள் இந்த புதிய பீட்டா பதிப்பை https://www.irctc.co.in/eticket/ என்ற முகவரியிலோ அல்லது தற்போதைய இணையதள முகப்புப் பக்கத்தில் உள்ள இணைப்பு மூலமாகவோ அணுகலாம். இந்த எளிமைப்படுத்தப்பட்ட புதிய அம்சங்கள் குறித்துப் பயனர்கள் தங்களது கருத்துக்களை வழங்குமாறு ரயில்வே அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கர்நாடகாவில் என்கவுண்ட்டரில் 3 பேர் சுட்டுக்கொலை : வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் சூறை!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:36:06 AM (IST)

உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு முன் காவிரியில் தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடகா!
சனி 15, ஆகஸ்ட் 2026 12:22:04 PM (IST)

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா புதிய உயரம் தொடும் : சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி!
சனி 15, ஆகஸ்ட் 2026 12:02:22 PM (IST)

கரூர் சம்பவத்தில் அரசு வேலை: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:41:00 PM (IST)

எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடக்கம்: ரூ.175 கோடி வரிப்பணம் வீண்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 11:50:45 AM (IST)

மக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தில் பிரதமர் மோடியுடன் கனிமொழி எம்.பி. பங்கேற்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:40:09 PM (IST)









