» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியாவில் ஜப்பான் நிறுவனங்கள் ரூ. 1.18 லட்சம் கோடி முதலீடு: சானே டகாயிச்சி உறுதி!
வியாழன் 2, ஜூலை 2026 5:00:33 PM (IST)
ஜப்பான் பிரதமரின் இந்தியப் பயணத்தைத் தொடர்ந்து, அந்நாட்டு முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் ரூ. 1.18 லட்சம் கோடி வரை பிரம்மாண்ட முதலீடுகளைச் செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜப்பான் பிரதமர் சானே டகாயிச்சி 3 நாள் அரசுமுறைப் பயணமாக ஜூன் 1 முதல் 3 வரை இந்தியா வந்திருந்தார். புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்தியப் பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் சானே டகாயிச்சியை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த உயர்நிலைச் சந்திப்பின் போது, இரு நாடுகளின் எதிர்கால முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு துறைகள் சார்ந்த மூலோபாய ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இந்த உச்சிமாநாட்டுடன் இணைந்து நடைபெற்ற இந்தியா - ஜப்பான் பொருளாதாரக் கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் பங்கேற்றன. இதனைத் தொடர்ந்து, ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் ரூ. 1.18 லட்சம் கோடி முதலீடு செய்யவிருப்பதை ஜப்பானின் தலைமை அமைச்சரவை துணைச் செயலாளர் மசானாவோ ஒசாகி உறுதிப்படுத்தியுள்ளார். அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானின் இந்திய முதலீடு ரூ. 6 லட்சம் கோடியைத் தொடும் என்று கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட உறுதிப்பாட்டின் தொடர்ச்சியாக இந்த தற்போதைய முதலீடு அமைந்துள்ளது.
இந்த இருதரப்புச் சந்திப்பின் மூலம், இந்தியாவும் ஜப்பானும் இணைந்து எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த எரிசக்தி கையிருப்பு முயற்சிகளை அதிகரிக்கும் ஆய்வில் ஈடுபடவுள்ளன. மேலும், பாதுகாப்புத் துறை சார்ந்த ஒத்துழைப்புக்கும் இதில் முக்கியத்துவம் தரப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, மேக் இன் இந்தியா திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக ஹரியானாவில் அமைக்கப்பட்டுள்ள மாருதி சுசூகியின் புதிய 4-வது உற்பத்தி ஆலையைப் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் இணைந்து தொடங்கி வைக்கின்றனர். இந்த ஆலைகளின் மொத்த மதிப்பு ரூ. 35,000 கோடியாகும். தற்போதைய சர்வதேச சூழலைக் கருத்தில் கொண்டு ஜப்பான்-இந்தியா இடையேயான வணிக உறவை வலுப்படுத்த இந்த பயணம் உறுதியான ஒத்துழைப்பைத் தந்துள்ளதாக ஜப்பான் பிரதமர் டோக்கியோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தில் பிரதமர் மோடியுடன் கனிமொழி எம்.பி. பங்கேற்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:40:09 PM (IST)

இது ரீல்ஸ் காலம்; குறுக்குவழி உங்களை முடக்கிவிடும்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:12:38 AM (IST)

காவிரி நீர் பிரச்சனை: கர்நாடக பந்த் அறிவிப்பு - பெங்களூருவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:58:31 AM (IST)

நோயல் டாடாவுடன் நிர்வாகக் கருத்து வேறுபாடு: டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் ராஜினாமா!
புதன் 12, ஆகஸ்ட் 2026 5:48:05 PM (IST)

உத்தரபிரதேசத்தில் போலி சான்றிதழ்கள் மூலம் வக்கீலாக பதிவு: 39 பேர் மீது போலீசார் வழக்கு
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:50:44 PM (IST)

தமிழகத்திற்குத் தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:40:58 PM (IST)







