» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஓய்வூதியமும் மருத்துவக் காப்பீடும் இணைந்த மத்திய அரசின் புதிய திட்டம் : விரைவில் அறிமுகம்!
வியாழன் 2, ஜூலை 2026 11:48:48 AM (IST)
பொதுவாக ஓய்வூதியத் திட்டங்களும் மருத்துவக் காப்பீடுகளும் தனித்தனியாகவே இருந்து வரும் நிலையில், தற்போது இவை இரண்டையும் ஒருங்கிணைத்து ஒரே திட்டமாக வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
வயதான காலத்தில் ஏற்படும் மருத்துவச் செலவுகளைக் கண்டு அஞ்சாமல், பொதுமக்கள் தங்களின் சேமிப்பைக் கொண்டே தரமான சிகிச்சையைப் பெற வழிவகை செய்யும் வகையில் 'என்.பி.எஸ். சுவாஸ்த்யா பென்ஷன்' என்ற புதிய திட்டம் இன்னும் 70 நாட்களுக்குள் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) தெரிவித்துள்ளது.இது குறித்து அவ்வாணையத்தின் தலைவர் எஸ்.ராமன் கூறும்போது, "இப்புதிய திட்டத்திற்கான முறையான ஒப்புதல்கள் பெறப்பட்டுவிட்டன. தற்போது இத்திட்டத்தினை முழுமையாகச் செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப ஒருங்கிணைப்புப் பணிகள் (Technical integration) மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன" என்று தெரிவித்துள்ளார்.
இந்த புதிய திட்டத்தின்படி, ஓய்வூதிய நிதி நிறுவனங்கள் நாட்டின் முன்னணி மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும். குறிப்பாக, ரூ.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை செலவாகக்கூடிய கடுமையான நோய்கள் மற்றும் பெரிய அறுவை சிகிச்சை போன்ற மருத்துவச் செலவுகளை எளிய முறையில் சமாளிக்க இத்திட்டம் பெரிதும் உதவும்.
இத்திட்டத்தின் சிறப்பம்சமாக, சிகிச்சைச் செலவுகளின் போது முதலில் பயனாளியின் ஓய்வூதிய மருத்துவக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகை நேரடியாக மருத்துவமனை அல்லது சம்பந்தப்பட்ட மருத்துவ சேவை வழங்குநருக்குச் செலுத்தப்படும். அதன் பிறகு மீதமுள்ள மருத்துவச் செலவுகளைக் காப்பீட்டு நிறுவனம் ஏற்கும் வகையில் இந்த நடைமுறை மிகவும் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய திட்டத்தின் கீழ், பொதுமக்கள் தங்களுக்கான மருத்துவ ஓய்வூதியக் கணக்கில் குறைந்தபட்சமாக ரூ.3,000 முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை பங்களிப்பு (Contribution) செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தில் பிரதமர் மோடியுடன் கனிமொழி எம்.பி. பங்கேற்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:40:09 PM (IST)

இது ரீல்ஸ் காலம்; குறுக்குவழி உங்களை முடக்கிவிடும்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:12:38 AM (IST)

காவிரி நீர் பிரச்சனை: கர்நாடக பந்த் அறிவிப்பு - பெங்களூருவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:58:31 AM (IST)

நோயல் டாடாவுடன் நிர்வாகக் கருத்து வேறுபாடு: டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் ராஜினாமா!
புதன் 12, ஆகஸ்ட் 2026 5:48:05 PM (IST)

உத்தரபிரதேசத்தில் போலி சான்றிதழ்கள் மூலம் வக்கீலாக பதிவு: 39 பேர் மீது போலீசார் வழக்கு
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:50:44 PM (IST)

தமிழகத்திற்குத் தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:40:58 PM (IST)







