» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சர்வதேச சந்தை எதிரொலி: வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.172.50 குறைந்தது
புதன் 1, ஜூலை 2026 11:51:58 AM (IST)
சர்வதேச சந்தையில் நிலவி வரும் கச்சா எண்ணெய் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, இந்தியாவில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டில் வணிக சிலிண்டர் விலை குறைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
மேற்கு ஆசியப் பகுதிகளில் நிலவி வந்த அரசியல் பதற்றங்கள் சற்றே தணிந்ததைத் தொடர்ந்து, சர்வதேச எரிபொருள் விலை மற்றும் அந்நியச் செலாவணி விகிதத்தைக் கணக்கில் கொண்டு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் இம்மாற்றத்தைச் செய்துள்ளன. மாதத்தின் முதல் நாளான இன்று (ஜூலை 1, புதன்கிழமை) புதிய விலைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னையில் ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை ரூ.172.50 குறைக்கப்பட்டு, ரூ.3,106-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாட்டின் பிற முக்கிய நகரங்களான டெல்லியில் ரூ.183.50 குறைக்கப்பட்டு ரூ.2,930-க்கும், மும்பையில் ரூ.2,885.50-க்கும் வணிக சிலிண்டர்கள் விற்பனையாகின்றன.
வீட்டு உபயோக சிலிண்டர் விலை:
வணிக சிலிண்டர்களின் விலை பெருமளவு குறைந்துள்ள போதிலும், பொதுமக்களின் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அது சென்னையில் வழக்கம்போல் ரூ.957.50 என்ற விலையிலேயே நீடிக்கிறது. அதேபோல், நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளிலும் இன்று எந்த மாற்றமும் செய்யப்படாமல் பழைய விலையிலேயே நீடிக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தில் பிரதமர் மோடியுடன் கனிமொழி எம்.பி. பங்கேற்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:40:09 PM (IST)

இது ரீல்ஸ் காலம்; குறுக்குவழி உங்களை முடக்கிவிடும்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:12:38 AM (IST)

காவிரி நீர் பிரச்சனை: கர்நாடக பந்த் அறிவிப்பு - பெங்களூருவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:58:31 AM (IST)

நோயல் டாடாவுடன் நிர்வாகக் கருத்து வேறுபாடு: டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் ராஜினாமா!
புதன் 12, ஆகஸ்ட் 2026 5:48:05 PM (IST)

உத்தரபிரதேசத்தில் போலி சான்றிதழ்கள் மூலம் வக்கீலாக பதிவு: 39 பேர் மீது போலீசார் வழக்கு
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:50:44 PM (IST)

தமிழகத்திற்குத் தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:40:58 PM (IST)







