» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சவுதியில் மரண தண்டனையில் இருந்து மீண்ட அப்துல் ரஹீமுக்கு கேரள மக்கள் வரவேற்பு!

வெள்ளி 29, மே 2026 12:42:56 PM (IST)



மரண தண்​டனையில் காப்பாற்றப்பட்டு 20 ஆண்டு​ சிறை​யில் இருந்த அப்​துல் ரஹீம் நேற்று கேரளா​ திரும்பினார்.

கேரளாவைச் சேர்ந்த அப்​துல் ரஹீம் சவுதி அரேபியாவில் அப்துல்லா என்பவரின் வீட்டில் 2006-ல் கார் ஓட்​டுநராகப் பணியாற்றினார். அப்​துல்​லா​வின் மகன் ஒரு மாற்​றுத்​திற​னாளி. அந்த சிறு​வனை​யும் பராமரிக்​கும் பொறுப்பு ரஹீமிடம் ஒப்படைக்கப்​பட்​டது. 

ஒரு​நாள் சிறு​வனை காரில் ரஹீம் அழைத்துச் சென்​ற​போது சிறு​வனின் கழுத்தில் இணைக்கப்பட்டிருந்த செயற்கை சுவாசக் ​குழாய் மீது ரஹீமின்கை தவறு​தலாகப் பட்​ட​தில் மரணமடைந்​தான்.

சிறு​வனின் பெற்​றோர் தொடுத்த வழக்​கில் ரஹீ​முக்கு மரண தண்டனை விதிக்கப்​பட்​டது. இது கொலை அல்ல விபத்து என்று ரஹீம் சார்​பாக பல்​வேறு அமைப்​பு​கள் வாதிட்​டன. இறு​தி​யில் நஷ்ட ஈடாக இந்​திய மதிப்​பில் ரூ.34 கோடி `குரு​திப் பணம்' அளிக்கும்​பட்​சத்​தில் ரஹீ​முக்கு மன்​னிப்பு அளிக்க பாதிக்​கப்​பட்ட பெற்​றோர் தரப்பு முன்​வந்​தது.

இதையடுத்து சவு​தி​யில் 18 ஆண்​டு​களாக சிறை​யில் சிக்கி தவித்து மரணத்​தின் விளிம்​பில் இருக்​கும் ரஹீமை காப்​பாற்ற ஒட்டுமொத்த கேரள மக்​களும் ஒன்று திரண்​டனர். கடந்த 2018-ம் ஆண்​டில் இருந்து முயற்சி செய்து ரூ.34.4 கோடி நிதி திரட்டப்பட்டது.

இதையடுத்து சிறு​வனின் பெற்​றோருக்கு ரூ.34 கோடி குரு​திப்​பணம் வழங்​கப்​பட்​டது. பணம் தரப்​பட்டு 2 ஆண்​டு​கள் ஆன நிலை​யில் பொது​ மன்​னிப்பு மூலம் 20 ஆண்​டு​களுக்​குப் பின்​னர் விடு​தலை​யான அப்​துல் ரஹீம் நேற்று கேரளா​வுக்கு வந்​தார். கோழிக்​கோட்​டிலுள்ள கரிப்​பூர் விமான​நிலை​யத்​தில் வந்திறங்கிய அவரை குடும்​பத்​தா​ரும், உறவினர், நண்​பர்​களும் உற்சாகத்துடன் வரவேற்​றனர். ரஹீமைப் பார்த்​ததும் குடும்பத்தார் கதறி அழுதனர்.

அப்​போது அப்​துல் ரஹீம் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, "எனக்​காக உதவிய அனை​வருக்​கும் எனது மனமார்ந்த நன்​றி. எனக்​காக ரூ.34 கோடி திரட்டி உதவிய கேரள மக்​களுக்கு என்றென்​றும் கடமைப்​ பட்​டுள்​ளேன். அவர்​களை மறக்​கவே மாட்டேன்” என்று கண்​ணீர் மல்க தெரி​வித்​தார். பின்​னர் தன்னை வரவேற்​கத் திரண்​டிருந்த மக்​களைப் பார்த்து கையசைத்​து​விட்​டு அவர்​தனது கிராமத்​துக்​கு புறப்​பட்​டார்​


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory