» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குடிப்பழக்கத்தால் பாதிப்பு: தந்தைக்குத் கல்லீரலைத் தானமாக வழங்கி உயிர் கொடுத்த மகள்!

செவ்வாய் 17, மார்ச் 2026 11:34:53 AM (IST)

கர்நாடகத்தில் குடிப்பழக்கத்தால் கல்லீரல் செயலிழந்த நிலையில் இருந்த தந்தைக்கு, அவரது 25 வயது மகள் கல்லீரல் தானம் செய்து உயிர் காத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில், ஜகலூர் பகுதியைச் சேர்ந்த அஜ்ஜப்பா (50), வேளாண்துறை ஊழியராகப் பணியாற்றி வருகிறார். மதுப் பழக்கத்திற்கு அடிமையானதால் இவரது கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தாவணகெரேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாகக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், அதற்கு ரூ.50 லட்சத்திற்கும் மேல் செலவாகும் என்றும் தெரிவித்தனர்.

தனியார் நிறுவன ஊழியரான அவரது மகள் சந்தனா (25), தன் தந்தையைக் காப்பாற்ற எத்தகைய தியாகத்திற்கும் துணிந்தார். அறுவை சிகிச்சைக்குத் தேவையான பெரும் தொகையைத் திரட்டியதுடன், தனது கல்லீரலையே தானமாக வழங்க முன்வந்தார். இதையடுத்து, மருத்துவர்கள் சந்தனாவின் கல்லீரலில் 40 முதல் 60 சதவீதப் பகுதியை அகற்றி, வெற்றிகரமாக அஜ்ஜப்பாவிற்குப் பொருத்தினர்.

தற்போது அஜ்ஜப்பா உடல்நலம் தேறி வரும் நிலையில், தந்தையின் உயிரைக் காப்பாற்றத் துணிச்சலுடன் முடிவெடுத்த சந்தனாவிற்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர். "பெற்றோரைக் காப்பதில் மகள்கள் சளைத்தவர்கள் அல்ல" என்பதற்கு இச்சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து

IndianMar 17, 2026 - 04:09:17 PM | Posted IP 104.2*****

Congratulations dear Sandhana

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory