» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மருத்துவக் கவுன்சிலால் நிராகரிக்கப்பட்ட 3 அடி உயர கணேஷ் பரையா அரசு மருத்துவரானார்!

செவ்வாய் 2, டிசம்பர் 2025 5:07:09 PM (IST)



குஜராத்தைச் சேர்ந்த 3 அடி உயரமுள்ள டாக்டர் கணேஷ் பரையா, இந்திய மருத்துவக் கவுன்சிலின் (MCI) ஆரம்ப நிராகரிப்பைச் சமாளித்து சட்டப் போராட்டத்திற்குப் பிறகு அரசு மருத்துவரானார். 

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் கணேஷ் பாரையா. அவருக்கு வயது 23. ஆனால் இவர் 3 அடி உயரம் கொண்டவர், பிறக்கும் போதே குள்ளத்தன்மையுடன் பிறந்தார். இவரின் உடலில் 72 சதவீத லோகோமோட்டிவ் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இவர் குள்ளமாக இருப்பதால் பள்ளி படிப்பில் சக மாணவர்களை போல் இவரால் சகஜமாக இருக்க முடியவில்லை. பலர் இவரை கேலி கிண்டல் செய்துள்ளனர். 

இருந்தும் அத்தனை ஏளனங்களையும் தாங்கிக் கொண்டார் கணேஷ். இவருடைய லட்சியமே மருத்துவராவது. இதனால் தனது கனவை நனவாக்க வெற்றிகரமாக படித்து முடித்திருந்தார். பின்னர் நீட் தேர்வு எழுதி அதிலும் வென்றார். ஆனால் இவருடைய உயரத்தை காரணமாக கூறி இந்திய மருத்துவ கவுன்சில் எம்பிபிஎஸ் படிக்கத் தகுதியற்றவர் என கூறியது. இதை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் கணேஷ் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு 2 ஆண்டுகள் நடந்தும் கணேஷுக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை. இந்த தீர்ப்பை எதிர்த்து கணேஷ் பாரையா உச்சநீதிமன்றத்தை நாடினார். 

அங்கு அவர் எம்பிபிஎஸ் படிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து 2018ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் பட்டப்படிப்பில் சேர்ந்தார். மாற்றுத்திறனாளியான கணேஷ் பரையா பல தடைகளை தாண்டி டாக்டர் ஆகி சாதனை படைத்துள்ளார். 2018ல் நீட் தேர்வில் வெற்றி பெற்றும் உயரம் குறைவாக இருந்ததால் மருத்துவம் படிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் போராடி படிப்பை முடித்து இப்போது அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்த நிலையில் தற்போது மருத்துவ உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory