» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இண்டிகோ நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம் : விமான கட்டணம் பல மடங்கு உயர்வு!

வெள்ளி 5, டிசம்பர் 2025 12:38:12 PM (IST)

இண்டிகோ விமான நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

இண்டிகோ விமான நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் விமான கட்டணம் ரூ.3,129-ல் இருந்து ரூ.20,599 வரை உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து திருச்சி செல்லும் விமான கட்டணம் ரூ.3,129-ல் இருந்து ரூ.14,961ஆக உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விமான கட்டணம் ரூ.6,805-ல் இருந்து ரூ.34,403 வரை உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மும்பை செல்லும் விமான கட்டணம் ரூ.5,980-ல் இருந்து ரூ.42,448 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து டெல்லி செல்லும் விமான கட்டணம் ரூ.7,746-ல் இருந்து ரூ.32,782 வரை உயர்ந்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory