» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.70 கோடி: மத்திய நிதி அமைச்சகம் தகவல்

திங்கள் 1, டிசம்பர் 2025 4:51:46 PM (IST)

நவம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல்  ரூ.1.70 கோடியாக உயர்ந்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி 2017 ஜூலை மாதத்தில் அறிமுகமானது. அதன் பின்னர் ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதியன்று, முந்தைய மாதத்தில் வசூலான வரித்தொகையை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இவ்வருடம் ஜிஎஸ்டி அறிமுகமாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

ஜிஎஸ்டியில் இருந்த 4 வரி அடுக்குகள் தற்போது 2 அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 22-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்த இந்த சீர்த்திருத்த நடவடிக்கையால் பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்தது. இதனால் மின்னணு சாதனங்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், நவம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் நிலவரத்தை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ரூ.1.69 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், நடப்பாண்டு நவம்பர் மாதத்தில் ரூ.1.70 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் வசூலான தொகையை விட 0.7 சதவீதம் அதிகம்.

மொத்த உள்நாட்டு வருவாய் 2.3% குறைந்து ரூ.1.24 லட்சம் கோடியாக இருந்தது. செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்த 375 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கையை தொடர்ந்து இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. பொருட்களின் இறக்குமதியிலிருந்து கிடைக்கும் வருவாய் நவம்பரில் 10.2% அதிகரித்து ரூ.45,976 கோடியாக உள்ளது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory