» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டிரம்ப் வராத தைரியத்தில் மோடி ஜி20 மாநாட்டுக்கு சென்றுள்ளார்: காங்கிரஸ் கிண்டல்!
வெள்ளி 21, நவம்பர் 2025 5:48:56 PM (IST)
ஜி-20 மாநாட்டை டிரம்ப் புறக்கணித்துள்ளதால், பிரதமர் மோடி மாநாட்டில் தைரியமாக பங்கேற்கிறார் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இந்த மாநாட்டின் மூன்று அமர்வுகளில் பிரதமர் மோடி பேசுகிறார். இதற்கிடையே தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிறத்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு துன்புறுத்தப்படுவதாக குற்றம்சாட்டி இந்த மாநாட்டை புறக்கணிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டைப் புறக்கணித்துள்ளதால், பிரதமர் நரேந்திர மோடி அதில் தைரியமாக பங்கேற்கிறார் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக எக்ஸ் இல் பதிவிட்ட காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், "அடுத்த ஜி-20 உச்சி மாநாடு அமெரிக்காவில் நடைபெறும், அந்த நேரத்தில், இந்தியா அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம்.
ஆனால், கடந்த ஏழு மாதங்களில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 61 முறை ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தி விட்டதாக மீண்டும் மீண்டும் கூறியுள்ளார். அடுத்த 12 மாதங்களில் அவர் இன்னும் எத்தனை முறை அதை மீண்டும் மீண்டும் சொல்ல முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள். அமெரிக்காவில் நடைபெறும் அடுத்த உச்சிமாநாட்டிற்குள் மோடி தனது நல்ல நண்பருடனான இராஜதந்திர அரவணைப்பை மீண்டும் தொடங்குவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இண்டிகோ நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம் : விமான கட்டணம் பல மடங்கு உயர்வு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:38:12 PM (IST)

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருகை : பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:25:58 AM (IST)

ஒரே நாளில் 180 விமானங்கள் ரத்து: பயணிகளிடம் மன்னிப்பு கோரிய இண்டிகோ நிறுவனம்!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:49:08 PM (IST)

இந்தியாவில் மின்வாகன சந்தை மதிப்பு ரூ.20 லட்சம் கோடியை தொடும்: நிதின் கட்காரி தகவல்
வியாழன் 4, டிசம்பர் 2025 5:33:58 PM (IST)

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதி: தர்மேந்திர பிரதான்
வியாழன் 4, டிசம்பர் 2025 12:22:21 PM (IST)

ஒரே நாடு, ஒரே தேர்தல்: இந்தியாவின் வளர்ச்சிக்கு திருப்புமுனை - ராம்நாத் கோவிந்த் பேச்சு
வியாழன் 4, டிசம்பர் 2025 11:16:19 AM (IST)










இந்தியன்Nov 22, 2025 - 09:13:36 AM | Posted IP 104.2*****