» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கோவா உள்பட 3 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்
திங்கள் 14, ஜூலை 2025 4:54:19 PM (IST)
ஹரியானா, கோவாவிற்கு ஆளுநர்களையும், லடாக்கிற்கு துணை நிலை ஆளுநரையும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார்.
இதன்படி, கோவா மாநில ஆளுநராக பசுபதி அசோக் கஜபதி ராஜு நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் மூத்த அரசியல்வாதி ஆவார். விமான போக்குவரத்து துறையின் முன்னாள் மத்திய மந்திரியாகவும் பதவி வகித்தவர்.இதேபோன்று, அரியானா மாநில ஆளுநராக ஆஷிம் குமார் கோஷ் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். பேராசிரியரான அவர் உயர் கல்வி துறையில் நிர்வாக துறையில் அனுபவம் வாய்ந்தவர் ஆவார்.
லடாக் யூனியன் பிரதேச ஆளுநராக கவீந்தர் குப்தா நியமிக்கப்பட்டு உள்ளார். ஜம்முவை சேர்ந்த மூத்த பா.ஜ.க. உறுப்பினரான அவர், ஜம்மு மற்றும் காஷ்மீரின் சட்டசபைக்கான சபாநாயகராகவும் பதவி வகித்திருக்கிறார்.
லடாக் துணை நிலை ஆளுநராக பதவி வகித்த ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரலான, பி.டி. மிஷ்ரா ராஜினாமா செய்த நிலையில், அதனை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்று கொண்டார். இதனை குடியரசுத் தலைவர் மாளிகை உறுதி செய்து அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மசோதாக்களுக்கு தமிழில் பெயர் வைக்காதது ஏன்? - கனிமொழி எம்.பி. கேள்வி
வியாழன் 18, டிசம்பர் 2025 3:51:31 PM (IST)

பனிக்காலங்களில் கிரிக்கெட் போட்டிகளை தென் இந்தியாவில் நடத்தலாம்: சசிதரூர் யோசனை
வியாழன் 18, டிசம்பர் 2025 3:46:32 PM (IST)

மெஸ்ஸிக்கு ரூ.10 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரம் பரிசளித்த ஆனந்த் அம்பானி!
புதன் 17, டிசம்பர் 2025 4:39:23 PM (IST)

மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியில் குளறுபடி: மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜினாமா
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:28:50 PM (IST)

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 3:46:07 PM (IST)

தமிழக தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம்: 3 மத்திய அமைச்சர்களை களமிறக்கிய பாஜக!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:51:50 AM (IST)










