» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மெஸ்ஸிக்கு ரூ.10 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரம் பரிசளித்த ஆனந்த் அம்பானி!

புதன் 17, டிசம்பர் 2025 4:39:23 PM (IST)



அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு  ரூ.10.91 கோடி மதிப்பிலான கைக்கடிகாரத்தை தொழிலதிபர் ஆனந்த் அம்பானி அன்பாக பரிசளித்துள்ளார். 

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும், 8 முறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றவருமான லயோனல் மெஸ்ஸி தனது இன்டர் மியாமி அணியினருடன் இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் வந்திருந்தனர்.

3 நாள் சுற்றுப்பயணத்தில் முதாவதாக கொல்கத்தாவில் தனது முழுஉருவ சிலையை திறந்து வைத்த பிறகு சால்ட்லேக் ஸ்டேடியத்திற்கு சென்ற மெஸ்ஸி அங்கு கூட்டம் அதிகம் இருந்ததால் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக அங்கிரந்து சிறிது நேரத்தில் வெளியேறினார்.

அடுத்ததாக ஐதராபாத் சென்ற மெஸ்ஸி அங்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் கால்பந்து ஆடினார். இதனையடுத்து 2-வது நாள் பயணமாக அவர் நேற்று மும்பை சென்றார். அங்குள்ள வான்கடே ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ரசிகர்கள் கூட்டத்தால் ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது.

மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்திய கால்பந்து நட்சத்திரம் சுனில் சேத்ரி உள்பட பிரபலங்களும் கலந்து கொண்டனர்.மெஸ்ஸிக்கு தனது கையெழுத்திட்ட பனியனை நினைவுப் பரிசாக டெண்டுல்கர் வழங்கினார். இங்கு மெஸ்ஸி ஒரு மணி நேரம் செலவிட்டார்.

இதனையடுத்து மெஸ்ஸி 3-வது நாள் சுற்றுப்பயணமாக இன்று டெல்லி சென்றார். மதியம் மும்பையில் இருந்து டெல்லி வந்தடைந்த மெஸ்ஸியும் அவரது குழுவும் அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த நிகழ்வில் பங்கேற்றனர்.மாலை 4 மணிக்குப் பிறகு நடந்த இந்த நிகழ்வில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா இந்திய கிரிக்கெட் அணியின் 10வது எண் ஜெர்சியை மெஸ்ஸிக்கு பரிசளித்தார்.

இதேபோல், மெஸ்ஸிக்கு தொழிலதிபர் ஆனந்த் அம்பானி அன்பாக பரிசளித்துள்ளார். அதன்படி, தொழிலதிபர் ஆனந்த் அம்பானி, மெஸ்ஸிக்கு ரிச்சர்ட் மில் RM 003 V2 ஆசிய எடிஷன் கைக்கடிகாரத்தை பரிசளித்தார். இதன் மதிப்பு சுமார் ரூ.10.91 கோடியாகும். உலகிலேயே இந்த எடிஷனில் 12 கைக்கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory