» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அம்பேத்கருக்கு அவமரியாதை: லாலுவுக்கு எஸ்சி ஆணையம் நோட்டீஸ்
செவ்வாய் 17, ஜூன் 2025 5:51:13 PM (IST)

அம்பேத்கருக்கு அவமரியாதை ஏற்படுத்தி விட்டதாக எழுத்துள்ள புகார் குறித்து லாலு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிஹார் எஸ்சி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
லாலு பிரசாத்தின் 78-வது பிறந்த தினம் கடந்தவாரம் கொண்டாடப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில், உடல்நிலை சரியில்லாத லாலு சோபாவில் அமர்ந்து, அருகிலுள்ள சோபாவில் கால்களை நீட்டி அமர்ந்திருந்தார்.
அப்போது ஒரு ஆதரவாளர் அம்பேத்கரின் உருவப்படத்தை லாலு கால்களுக்கு அருகில் வைத்து அவரை வாழ்த்தினார். இது பெரும் புயலை கிளப்பியுள்ளது. அம்பேத்கருக்கு அவமரியாதையை ஏற்படுத்தி விட்டதாக எதிர்க் கட்சிகள் லாலு மீது குற்றம்சாட்டியுள்ளன. இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க பிஹார் எஸ்சி ஆணையம் லாலுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)










