» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை: பிரபல நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 12:35:01 PM (IST)
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ஐதராபாத் ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் ரூ.5.9 கோடி பெற்றதில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ரியல் எஸ்டேட் நிறுவன வழக்கில் ஏப்.27ல் விசாரணைக்கு ஆஜராக மகேஷ் பாபுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.சாய் சூர்யா மற்றும் சுரானா என இரண்டு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் புதிய புராஜக்டுகளை ஆமோதித்து எண்டார்ஸ்மெண்ட் செய்திருந்தார் நடிகர் மகேஷ் பாபு. இதற்காக சுமார் 5.9 கோடி ரூபாயை அவர் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் ரூ.3.4 கோடி காசோலையாகவும், ரூ.2.5 கோடி ரொக்கமாகவும் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இந்த பணத்தை மோசடி மூலம் பெற்றிருக்கலாம் என அமலாக்கத் துறை அதிகாரிகள் சந்தேகித்ததன் அடிப்படையில் மகேஷ் பாபுவுக்கு தற்போது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஒரே மனையை பலருக்கு விற்பனை செய்தது, போலியான பதிவு உத்தரவாதத்தை அளித்தது, ஒழுங்குமுறை சாராத மனை பிரிவுகளுக்கு மனை வாங்க முன்வந்தவர்களிடம் இருந்து முன்பணம் பெற்றது என இந்த நிறுவனங்கள் கோடி கணக்கிலான ரூபாயை மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் இந்த வழக்கில் ஏப்.27ல் ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக மகேஷ் பாபுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)










