» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பங்குச்சந்தை மோசடி: மாதவி புரி புச் மீது எப்ஐஆர் பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
திங்கள் 3, மார்ச் 2025 10:36:53 AM (IST)
மாதவி புரி புச் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செபி தலைவராக பதவியேற்கும் முன், ஐசிஐசிஐ வங்கியில் மாதவி புச் முக்கிய பதவிகளை வகித்தாா். இந்நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு செபியில் மாதவி புச் சோ்ந்தது முதல், செபியிடம் இருந்து ஊதியம் பெறுவது மட்டுமின்றி, விதிமுறைகளை மீறி ஐசிஐசிஐ வங்கியிலும் அவா் பதவி வகித்து வருவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.
2017-ஆம் ஆண்டு முதல், அந்த வங்கியிடம் இருந்து ஊதியம் மற்றும் பிற பணப் பலன்கள் மூலம், அவா் ரூ.16.8 கோடி வருவாய் ஈட்டியதாகவும் அக்கட்சி தெரிவித்தது. இதுபோல மேலும் பல ஊழல் குற்றச்சாட்டுகளை மாதவி மற்றும் அவரின் கணவா் தவல் புச் மீது காங்கிரஸ் முன்வைத்துள்ளது.
இந்த நிலையில், பங்குச்சந்தை மோசடி மற்றும் முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள செபி முன்னாள் தலைவர் மாதவி புரி புச் மற்றும் இதில் தொடர்புடைய 5 பேர் மீது எஃப்ஐஆர் பதிந்து விசாரிக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாதவி புச் ஊழலில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாா்கள் தொடா்பான வழக்கின் விசாரணை நீதிமன்ற மேற்பார்வையில் நடைபெறும் என்றும், அடுத்த 30 நாள்களுக்குள் வழக்கின் விசாரணை நிலை குறித்த இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.இந்த நிலையில், ஊழல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக செபி தரப்பிலிருந்து நேற்று (மார்ச் 2) தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியத்தின் (செபி) தலைவா் மாதபி புரி புச்சின் மூன்றாண்டு பதவிக் காலம் வெள்ளிக்கிழமையுடன் (பிப்.28) நிறைவடைந்த நிலையில், புதிய தலைவராக மத்திய நிதி மற்றும் வருவாய் துறை செயலா் துஹின் காந்த பாண்டே கடந்த வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.2 உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
திங்கள் 7, ஏப்ரல் 2025 5:13:43 PM (IST)

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு: மத்திய அமைச்சர் அறிவிப்பு !
திங்கள் 7, ஏப்ரல் 2025 5:08:42 PM (IST)

வக்பு வாரியங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கம் இல்லை: ஜேபி நட்டா
திங்கள் 7, ஏப்ரல் 2025 3:40:50 PM (IST)

எம்புரான் திரைப்படத் தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1½ கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை தகவல்!
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 9:16:37 AM (IST)

இந்திய தமிழர்களின் கோரிக்கையை இலங்கை நிறைவேற்றும்: பிரதமர் மோடி நம்பிக்கை
சனி 5, ஏப்ரல் 2025 5:32:43 PM (IST)

இயற்கை பேரிடர் பாதிப்பு: தமிழ்நாட்டுக்கு கூடுதலாக ரூ.522.34 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு
சனி 5, ஏப்ரல் 2025 5:13:53 PM (IST)
