» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

வெள்ளி 14, பிப்ரவரி 2025 11:44:27 AM (IST)

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுவதாக என மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துளது. 

வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், இட ஒதுக்கீடு தொடர்பாக, மெய்டி - கூகி பிரிவினரிடையே, 2023 மே மாதம் மோதல் வெடித்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பைரேன் சிங், முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இதையடுத்து, முதல்வர் பதவியை பா.ஜ., மூத்த தலைவர் பைரேன் சிங், 64, ராஜினாமா செய்தார். இதை ஏற்ற கவர்னர் அஜய் குமார் பல்லா ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுவதாக என மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. அரசியலமைப்பின் 356வது பிரிவின் அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறப்பித்து உள்ளார்.

ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கவர்னர் அஜய் பல்லாவிடம் வந்த அறிக்கை மற்றும் கிடைத்த தகவல்களை தீவிரமாக பரிசீலனை செய்ததில், இந்திய அரசியலமைப்பின்படி அந்த மாநிலத்தில் அரசை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது என்பதில் ஜனாதிபதி திருப்தி அடைந்துள்ளார், எனக்கூறப்பட்டு உள்ளது. 1951ல் மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுவது இது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital

New Shape Tailors





Thoothukudi Business Directory