» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்: தேவஸ்தானம் அறிவிப்பு

புதன் 8, ஜனவரி 2025 5:08:38 PM (IST)



திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

சீனாவில் பரவுவதாக கூறப்பட்ட எச்.எம்.பி.வி. தொற்று இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 2 குழந்தைகளும், குஜராத்தில் ஒரு குழந்தையும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அதே போல் தமிழகத்தில் சென்னை மற்றும் சேலத்தை சேர்ந்த 2 குழந்தைகள் எச்.எம்.பி.வி. தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளனர்.

இதனிடையே மராட்டிய மாநிலம் நாக்பூரில் மேலும் 2 குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டதால், இந்தியாவில் எச்.எம்.பி.வி. தொற்று பாதிப்பு எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது. இந்த தொற்று குறித்து அச்சப்படத்தேவையில்லை. அதே நேரம் நிலைமையை கவனித்து வருகிறோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எச்.எம்.பி.வி. தொற்று பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசணம் செய்ய வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் நாயுடு அறிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital




New Shape Tailors





Thoothukudi Business Directory