» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் : பிப்.8ல் வாக்கு எண்ணிக்கை!

செவ்வாய் 7, ஜனவரி 2025 5:20:44 PM (IST)

டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். 

டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் பிப்ரவரி 23-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், சட்டசபை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

அதன்படி, 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வேட்பு மனு தாக்கல் தொடக்கம் 10.01.2025
  • வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் 17.01.2025
  • வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 18.01.2025
  • வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் 20.01.2025
ஆம் ஆத்மி கட்சி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டிக்கு டெல்லி அரசியல் களத்தில் உள்ளது. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே காரசார பேச்சுகள், வாக்காளர் பட்டியல் வெளியீடு என அரசியல் களம் களை கட்டியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. பாஜக 8 தொகுதிகளில் வென்றது, காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors



Arputham Hospital



Thoothukudi Business Directory