» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து : மத்திய கல்வித்துறை அறிவிப்பு
திங்கள் 23, டிசம்பர் 2024 4:43:28 PM (IST)
எட்டாம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி என்ற முறையை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகளில் 5 முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஃபெயில் ஆக்கக் கூடாது என்கிற கொள்கை ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வித்துறைச் செயலாளர் அறிவித்துள்ளார். தற்போதுள்ள எட்டாம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி என்ற முறையை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இறுதித் தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு 2 மாதங்களுக்குப் பிறகு மறுதேர்வு நடத்தப்படும் என்றும் மறுதேர்வில் மீண்டும் தோல்வியடைந்தால் அவர்கள் அடுத்த வகுப்புக்கு செல்ல முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.