» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்திய ரிசர்வ் வங்கியின் 26-வது ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா பொறுப்பேற்பு!
வியாழன் 12, டிசம்பர் 2024 11:58:39 AM (IST)
இந்திய ரிசர்வ் வங்கியின் 26-வது ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா பொறுப்பேற்றார்.
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக 6 ஆண்டுகள் பணியாற்றிய சக்திகாந்த தாஸ் நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். புதிய ஆளுநராக, வருவாய் செயலாளராக இருந்த சஞ்சய் மல்கோத்ரா நியமிக்கப்பட்டார். அவர் நேற்று ரிசர்வ் வங்கியின் 26-வது ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார். 3 ஆண்டுகளுக்கு அவர் அப்பதவியில் இருப்பார்.
முன்னதாக மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி தலைமையகத்துக்கு வந்த அவரை மூத்த ஊழியர்கள் வரவேற்றனர். ஆவணங்களில் கையெழுத்திட்டு, மல்கோத்ரா பொறுப்பேற்றார். அப்போது, ரிசர்வ் வங்கி துணை ஆளுநர்கள் சுவாமிநாதன், ராஜேஷ்வர் ராவ், ரவிசங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.