» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

புஷ்பா 2 சிறப்புக் காட்சிக்கு சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலி!

வியாழன் 5, டிசம்பர் 2024 11:49:48 AM (IST)

ஹைதராபாத்தில் புஷ்பா 2 திரைப்படம் சிறப்புக் காட்சிக்கு சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். 

நடிகர் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புஷ்பா இரண்டாம் பாகம் திரையரங்குகளில் இன்று காலை வெளியாகியுள்ளது. தெலுங்கு, தமிழ், ஹிந்து, கன்னடம் என ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லாததால் புஷ்பா 2 படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு மேல் திரையிடப்பட்டுள்ளது. 

மற்ற மாநிலங்களில் அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில்  2 சிறப்புக் காட்சி பார்ப்பதற்காக இன்று அதிகாலையிலேயே வந்த ரேவதி (39) என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கிமயக்கமடைந்த அவரை காவலர்கள் முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். மேலும், அவரது குழந்தைகளுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital

New Shape Tailors




Thoothukudi Business Directory