» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அரசியல் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறை என் மீது வழக்கு : சித்தராமையா குற்றச்சாட்டு

வியாழன் 5, டிசம்பர் 2024 11:26:23 AM (IST)

"அமலாக்கத்துறை அதிகாரிகள் அரசியல் உள்நோக்கத்துடன் எனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர்" என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) 14 வீட்டுமனைகளை ஒதுக்கி இருந்தது. அதாவது பார்வதி பெயரில் இருந்த 3.16 ஏக்கர் நிலத்தை மூடா கையகப்படுத்திவிட்டு, அதற்கு பதிலாக வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் சித்தராமையாவின் மனைவிக்கு வீட்டுமனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

அதுகுறித்து விசாரணை நடத்த கவர்னர் தாவர்சந்த் கெலாட்டும் அனுமதி வழங்கினார். அதன்பேரில், மைசூரு லோக் அயுக்தா போலீசார், முதல்-மந்திரி சித்தராமையா, அவரது மனைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த ஆதாரத்தின் பேரிலும், சமூக ஆர்வலர் சினேகமயி கிருஷ்ணா அளித்த புகாரின் பேரிலும் முதல்-மந்திரி சித்தராமையா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

நில முறைகேடு குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணையை தீவிரப்படுத்தி இருப்பதுடன், மைசூருவில் உள்ள மூடா அலுவலகத்தில் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர். இதுகுறித்து சித்தராமையா மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''நிலம் ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் எனது தலையீடு எதுவும் இல்லை. நான் எந்த விதிமுறை மீறலிலும் ஈடுபடவில்லை. 

இந்த வழக்கில் நான் நிரபராதியாக வெளியே வருவேன். ஆனால் அரசியல் ரீதியாக பழிவாங்க பல்வேறு முயற்சிகள் நடந்து வருகின்றன. அமலாக்கத்துறை அதிகாரிகள் அரசியல் உள்நோக்கத்துடன் எனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital


New Shape Tailors



Thoothukudi Business Directory