» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தொழில் நுட்பக் கோளாறு: பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு!

புதன் 4, டிசம்பர் 2024 4:58:07 PM (IST)

செயற்கைக்கோளில் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக  பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஏவுதல் நாளைக்கு (வியாழக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் 'புரோபா-3' என்று பெயரிடப்பட்ட இணை செயற்கைகோளை (2 செயற்கைகோள்கள்) உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைகோள்கள் சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

550 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏவுதளமான, ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) மாலை 4.08-க்கு மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஏவுதல் நாளைக்கு (வியாழக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புரோபா-3 செயற்கைக்கோளில் கடைசி நேரத்தில் கண்டறியப்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 4.12 மணிக்கு ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. செயற்கைகோளில் ஏற்பட்ட கோளாறை செய்யும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital

New Shape Tailors




Thoothukudi Business Directory