» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் : உமர் அப்துல்லா கடும் கண்டனம்

திங்கள் 4, நவம்பர் 2024 11:12:59 AM (IST)

ஜம்மு காஷ்மீரில் அப்பாவி மக்கள் மீது கையெறி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது மிகுந்த கவலை அளிக்கிறது என்று முதல்-அமைச்சர்உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் சுற்றுலா வரவேற்பு மையம் அருகே உள்ள மார்க்கெட் நேற்று வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. விடுமுறை நாள் என்பதால் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மக்களின் பாதுகாப்புக்காக ராணுவ வீரர்கள் சந்தைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதி ஒருவர் ராணுவ வீரர்களை நோக்கி கையெறி குண்டு ஒன்றை வீசினார்.

ஆனால் எதிர்பாராத விதமாக அந்த குண்டு பாதி வழியிலேயே சாலையில் விழுந்தது. அந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. சந்தையில் இருந்த மக்கள் அலறியடித்தபடி அங்கும், இங்குமாக ஓட்டம் பிடித்தனர். எனினும் இந்த குண்டு வீச்சில் 2 பெண்கள் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

குண்டுவீச்சு சம்பவத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். அவர்கள் படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.இந்த நிலையில் பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு காஷ்மீர் முதல்-அமைச்சர் உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "ஸ்ரீநகரில் உள்ள சந்தையில் அப்பாவி மக்கள் மீது கையெறி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது மிகுந்த கவலை அளிக்கிறது. அப்பாவி பொதுமக்களை குறிவைப்பதை நியாயப்படுத்த முடியாது. இந்த தாக்குதல்களின் வேகத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவர ராணுவம் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும், இதனால் மக்கள் எந்த அச்சமும் இல்லாமல் தங்கள் வாழ்க்கையை நடத்த முடியும்" என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


New Shape Tailors






Thoothukudi Business Directory