» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான காலம் 60 நாட்களாக குறைப்பு : ரயில்வே அறிவிப்பு

வெள்ளி 18, அக்டோபர் 2024 8:49:01 AM (IST)

ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான காலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்து உள்ளது.

தொலைதூர பயணங்களுக்கு மக்கள் அதிகமாக விரும்பும் பயணம் ரயில் பயணம் ஆகும். விமானத்தை கணக்கிடும்போது ரயில் கட்டணம் மிகவும் மலிவானது என்பதால் மக்களின் நாட்டம் இதில் அதிகமாக உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை ஆண்டுக்கு 30 முதல் 35 கோடி பேர் ரயிலில் முன்பதிவு செய்து பயணிக்கிறார்கள்.

இந்த முன்பதிவுக்கான காலம் தற்போது 120 நாட்களாக உள்ளது. அதாவது 4 மாதங்களுக்கு முன்பே ரயில் பயணத்தை திட்டமிட்டு முன்பதிவு செய்ய முடியும். இது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு 365 நாட்கள் அதாவது ஒரு ஆண்டாக இருக்கிறது.

இதற்கிடையே இந்த முன்பதிவு காலத்தை 60 நாட்களாக குறைத்து இந்திய ரயில்வே மற்றும் சுற்றுலாக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 60 நாட்களாக குறைக்கப்பட்ட இந்த நடைமுறை அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந் தேதியில் இருந்து அமலாகும்.

ஆனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான ஓராண்டு காலவரம்பில் எந்த மாற்றமும் இல்லை. அதைப்போல சில பகல் நேர ரயில்களுக்கான 4 மாத முன்பதிவு காலத்திலும் மாற்றம் இல்லை.

முன்பதிவு காலம் குறைப்பு 1-ந்தேதியில் இருந்துதான் அமலாகும் என்பதால் ஏற்கனவே டிக்கெட் எடுத்தவர்களுக்கும், வருகிற 31-ந் தேதி வரை டிக்கெட் எடுக்கிறவர்களுக்கும் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors


Arputham Hospital





Thoothukudi Business Directory