» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு: அமைச்சரவை ஒப்புதல்

புதன் 16, அக்டோபர் 2024 4:25:54 PM (IST)

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜூலை 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும்.

அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், "விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (டிஏ) மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலை நிவாரணம் கூடுதலாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இப்போது அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தில் 50 சதவீதம் அகவிலைப்படியாக வழங்கப்படுகிறது. தற்போது 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது 01.07.2024 முதல் நடைமுறைக்கு வரும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலை நிவாரண உயர்வால் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 64.89 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். இதனால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.9,448.35 கோடி கூடுதல் செலவாகும்.

மேலும் 2025-26 மார்க்கெட்டிங் சீசனுக்கான அனைத்து ரபி பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்.எஸ்.பி.) உயர்த்தி வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்மூலம் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

கேரளாவில் துணை ஆட்சியர் தற்கொலை!

செவ்வாய் 15, அக்டோபர் 2024 9:04:30 PM (IST)

Sponsored Ads


New Shape Tailors



Arputham Hospital





Thoothukudi Business Directory