» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
காங்கிரசின் பிரிவினைவாத அரசியலை அரியானா மக்கள் நிராகரித்துள்ளனர்: அமித் ஷா
புதன் 9, அக்டோபர் 2024 10:35:21 AM (IST)
காங்கிரசின் பிரிவினைவாத அரசியலை அரியானா மக்கள் முற்றிலும் நிராகரித்துள்ளனர் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கருத்து தெரிவித்தார்.

90 தொகுதிகள் கொண்ட அரியானா மாநிலத்தில், ஆட்சி அமைக்க 46 தொகுதிகள் தேவை. தற்போது அங்கு பா.ஜ.க. 48 தொகுதிகளிலும், காங்கிரஸ் 37 தொகுதிகளிலும் முன்னிலை வகித்துவருகின்றன. கிட்டத்தட்ட பா.ஜ.க. அரியானாவில் ஆட்சி அமைப்பது உறுதி என அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்த முறை பா.ஜ.க. அரியானாவில் ஆட்சி அமைத்தால் அது வரலாற்று சாதனையாக அமையும். இதன்படி தொடர்ந்து மூன்றாவது முறையாக பா.ஜ.க.வே ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் வெளிநாடுகளுக்கு சென்று தங்கள் வாக்கு வங்கிக்காக நாட்டை அவமதிப்பவர்களுக்கு பாடம் புகட்டப்பட்டுள்ளதாக உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "அரியானாவில் பாஜகவின் மகத்தான வெற்றி, பிரதமர் தலைமையிலான பாஜக அரசின் மீது விவசாயிகள், ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், வீரர்கள் மற்றும் இளைஞர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையின் வெற்றி. சாதி மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிக்கும் காங்கிரசின் "எதிர்மறை மற்றும் பிளவுபடுத்தும் அரசியலை" 'வீரபூமி' யான அரியானா மக்கள் முற்றிலும் நிராகரித்துள்ளனர். பாஜகவின் வளர்ச்சி மற்றும் ஏழைகளின் நலனுக்கான 10 ஆண்டு கால சாதனையை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
விவசாயிகள் மற்றும் ராணுவ வீரர்களின் பூமியான அரியானா, வெளிநாடுகளுக்கு சென்று தங்கள் வாக்கு வங்கிக்காக நாட்டை அவமதிப்பவர்களுக்கு பாடம் புகட்டியுள்ளது. தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக மாநிலத்திற்கு சேவை செய்ய பாஜகவுக்கு வாய்ப்பளித்த அரியானா மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அதில் அமித் ஷா பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென் மாநிலங்களின் தொகுதிகள் குறையக் கூடாது: பிரதமருக்கு, ஜெகன் மோகன் கடிதம்
சனி 22, மார்ச் 2025 12:52:18 PM (IST)

செயலற்ற மொபைல் எண்களின் யுபிஐ சேவை ஏப். 1 முதல் நிறுத்தம்: என்பிசிஐ அறிவிப்பு!
சனி 22, மார்ச் 2025 12:11:56 PM (IST)

தங்கள் ஊழலை மறைக்கவே மொழி பிரச்சினையை கிளப்புகிறார்கள் : தி.மு.க. மீது அமித்ஷா தாக்கு
சனி 22, மார்ச் 2025 8:44:22 AM (IST)

உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்: நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது!
சனி 22, மார்ச் 2025 8:40:41 AM (IST)

சூதாட்ட செயலி விளம்பரம்: பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டா உள்பட 25 பேர் மீது வழக்கு
வெள்ளி 21, மார்ச் 2025 11:37:12 AM (IST)

கொச்சி விமான நிலையத்தில் ரூ.4.5 கோடி கஞ்சா பறிமுதல்: மாடல் அழகி உள்பட 2 பெண்கள் கைது!
வியாழன் 20, மார்ச் 2025 7:44:02 PM (IST)
