» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உ.பி.யில், பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 5 பேர் பலி : முதல்வர் யோகி இரங்கல்!

செவ்வாய் 17, செப்டம்பர் 2024 12:37:07 PM (IST)

உத்தரப் பிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் ஷிகோஹாபாத் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நௌஷேரா பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் நேற்று இரவு இந்த வெடிப்பு விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்துக்குத் தீயணைப்பு மற்றம் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் குழு நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு குடோனில் நடந்த விபத்து குறித்து உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதுடன், சம்பவ இடத்துக்குச் சென்று நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory