» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லியில் கடும் பனி மூட்டம்: விமானம், ரயில் சேவை கடுமையாக பாதிப்பு!

வெள்ளி 10, ஜனவரி 2025 11:16:36 AM (IST)



டெல்லி உட்பட வட மாநிலங்களில் நிலவி வரும் மூடுபனி காரணமாக விமானங்கள் மற்றும் ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் தற்போது குளிர்காலம் நிலவி வருகிறது. குறிப்பாக வட இந்தியாவில் இந்த காலத்தில் கடும் குளிரும், பனிப்பொழிவும் இருக்கும். அதன்படி, வட இந்தியாவில் இப்போது குளிர்காலம் நிலவி வருவதால் அங்குக் கடுமையான மூடுபனி நிலவுகிறது. இதனால் டெல்லியில் இன்று மட்டும் 150-க்கும் மேற்பட்ட விமானங்களும் சுமார் 26 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

டெல்லி சர்வதேச விமான நிலையம் இன்று காலை வெளியிட்ட அறிவிப்பில், அடர்ந்த மூடு பனி காரணமாக விமான புறப்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் சுமார் 41 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனிடையே, டெல்லியில் காற்றின் தரக்குறியீடு இன்று காலை 6 மணி அளவில் 408 ஆக பதிவானது. இது மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் கூற்றுபடி, மிகவும் மோசமானது என்பதிலிருந்து கடுமையானது என்ற வகைக்கு மாறியுள்ளது.

மேலும் டெல்லியில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 6 முதல் 20 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதன்படி இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 9.6 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது.வட இந்தியாவில் கடந்த சில வாரங்களாக அடர்ந்த மூடுபனி காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் மற்றும் ரயில்கள் ரத்து மற்றும் தாமதமாக இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

New Shape Tailors







Thoothukudi Business Directory