» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வந்தே மெட்ரோ' ரயில் சேவைக்கு 'நமோ பாரத் ரேபிட் ரயில்' என பெயர் மாற்றம்

திங்கள் 16, செப்டம்பர் 2024 4:09:55 PM (IST)

குஜராத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் 'வந்தே மெட்ரோ' ரயில் சேவைக்கு 'நமோ பாரத் ரேபிட் ரயில்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் குஜராத் பயணத்தின் போது, நாட்டின் முதல் 'வந்தே மெட்ரோ' சேவையை இன்று தொடங்கி வைக்க உள்ளார். முழுவதும் குளிர்சாதன பெட்டிகளைக் கொண்ட முன்பதிவில்லா ரயிலாக 'வந்தே மெட்ரோ' ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் வந்தே மெட்ரோ ரயில் (Vande Metro Rail) நமோ பாரத் ரேபிட் ரயில் (Namo Bharat Rapid Rail) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இது இந்தியாவின் முதல் நமோ பாரத் ரேபிட் ரயில் சேவை ஆகும். இந்த ரயில் 360 கி.மீட்டர் தூரம் கொண்ட அகமதாபாத்- புஜ் இடையே இயக்கப்பட இருக்கிறது. 110 கி.மீ. வேகத்தில் இந்த ரயில் செல்லக்கூடியது. அஞ்சார், காந்திதாம், பச்சாயு, ஹல்வாத், த்ரங்காத்ரா, விராம்காம், சந்த்லோதியா, சபர்மதி, அகமதாபாத்தில் உள்ள கலுபுர் ஆகிய ரயில் நிலையங்கள் அடங்கியுள்ளன.

வாரத்திற்கு ஆறு நாள் இந்த ரயில் இயக்கப்படுகிறது. இதன்படி காலை 5.05 மணிக்கு புஜ் நகரில் இருந்து புறப்படும் இந்த ரயில். காலை 10.50 மணிக்கு அகமதாபாத் சென்றடையும். மறுமார்க்கத்தில் அகமதாபாத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும் ரயில். இரவு 11.20 மணிக்கு புஜ் நகரை சென்றடையும். இந்த ரயிலில் 1,150 பயணிகள் அமர்ந்து செல்லமுடியும். 

2,058 பேர் நின்று கொண்டு பயணம் செய்ய முடியும். இந்த ரயில் முழுவதும் ஏ.சி. வசதி கொண்டது. புஜ் நகரில் இருந்து அகமதாபாத்திற்கு செல்ல சுமார் 430 ரூபாய் கட்டணம் ஆகும். குறைந்தபட்ச டிக்கெட் விலை 30 ரூபாய் ஆகும். தொடர்ந்து பயணம் செய்பவர்கள் வாரம், இருவாரம், மாத சீசன் டிக்கெட் பெறும் வசதி உள்ளது. இந்த ரயில் சனிக்கிழமை புஜ் நகரில் இருந்தும், ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் இருந்தும் புறப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory