» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
விநாயகர் சிலை ஊர்வலத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: 52 பேர் கைது; 150 பேர் மீது வழக்கு
வெள்ளி 13, செப்டம்பர் 2024 8:40:33 AM (IST)
கர்நாடகவில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கற்கள், பெட்ரோல் குண்டு வீசி தாக்கி கலவரத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் நாகமங்களா டவுன் பதரிகொப்பா பகுதியிலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த விநாயகர் சிலையை கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.
பதரிகொப்பாவில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் இரவு 7.45 மணி அளவில் மண்டியா சர்க்கிளில் மசூதி அருகே வந்தது. அப்போது அங்கிருந்த 40-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் விநாயகர் சிலை ஊர்வலத்தை தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது. மேலும், பட்டாசு வெடிக்காமல், கோஷம் எழுப்பாமல், ‘டி.ஜே.’ இசை ஒலிக்காமல் செல்லும்படி தெரிவித்துள்ளனர். ஆனாலும் அவர்கள் அதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பட்டாசு வெடித்தப்படியும், ‘டி.ஜே.’ இசை ஒலித்தப்படியும், ‘ஜெய்ஸ்ரீராம்’ என கோஷமிட்டப்படியும் முன்னேறி செல்ல முயன்றனர்.
பதிலுக்கு எதிர் தரப்பினரும் கோஷம் எழுப்பியதாக தெரிகிறது. இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த சமயத்தில் கட்டிடத்தின் மீது நின்ற சிலர் ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மீது கற்களை வீசி தாக்கினார்கள். பதிலுக்கு ஊர்வலத்தில் பங்கேற்றவர்களும் கற்களை வீசி தாக்கினார்கள். இதனால் இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கைகலப்பில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இந்து அமைப்பினர் விநாயகர் சிலையை நாகமங்களா போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கல்வீசி தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து போலீசாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருதரப்பினர் இடையேயும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருதரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டனர்.
இதனால் மீண்டும் அவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது இருதரப்பினரும் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கி கொண்டனர். கற்கள், பெட்ரோல் குண்டு என மாறி மாறி இருதரப்பினரும் தாக்கி கொண்டதால் அந்தப்பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது. அங்கிருந்த பழைய இரும்பு கடை, துணிக்கடை, பேன்சி ஸ்டோர், புத்தக கடையை சூறையாடியதுடன் தீவைத்து கொளுத்தினர். அத்துடன் சாலையோரம் இருந்த தள்ளுவண்டி, சரக்கு வாகனம், இருசக்கர வாகனங்களுக்கும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் தீவைத்து கொளுத்தினர். இதனால் கடைகள் மற்றும் வாகனங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன.
இதையடுத்து போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் நாலாபுறமும் சிதறி அடித்து ஓடினார்கள். அங்கு கிடந்த வாள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர். இதற்கிடையே இரவு 10 மணி அளவில் மண்டியா சர்க்கிள் பகுதியில் பெட்ரோல் குண்டை வீசி மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர்.
சாலையில் டயர்களை போட்டு தீவைத்து கொளுத்தினர். இதனால் நாகமங்களா டவுனில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு உடனடியாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் கண்காணிப்பு கேமரா காட்சிகளில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கலவரத்தில் ஈடுபட்டதாக 52 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருதரப்பையும் சேர்ந்த 150 பேர் மீது புதிய தண்டனை சட்டத்தின்படி 10 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த கலவரம் மண்டியா மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கர்நாடகாவில் தக் லைஃப் படத்தின் ரிலீஸை தடுத்தால் வழக்குப் பதிவு: உச்சநீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 19, ஜூன் 2025 4:08:52 PM (IST)

ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறப் போவதில்லை: தமிழக அரசு
வியாழன் 19, ஜூன் 2025 12:18:01 PM (IST)

ஆமதாபாத் விபத்து: ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பு
வியாழன் 19, ஜூன் 2025 11:30:43 AM (IST)

ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் ஏன்? தமிழக காவல்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
புதன் 18, ஜூன் 2025 12:03:10 PM (IST)

இந்தியா- பாக்., மோதலில் டிரம்ப் மத்தியஸ்தம் செய்யவில்லை: பிரதமர் மோடி கருத்து
புதன் 18, ஜூன் 2025 11:55:34 AM (IST)

திருப்பதி விமான நிலையத்துக்கு ஏழுமலையான் பெயர் : அறங்காவலர் குழு பரிந்துரை
புதன் 18, ஜூன் 2025 11:13:52 AM (IST)
