» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆதார் கார்டு கட்டணமின்றி திருத்தம் செய்ய காலக்கெடு டிச.14ஆம் தேதி வரை நீட்டிப்பு!

வியாழன் 12, செப்டம்பர் 2024 5:37:30 PM (IST)

ஆதார் விவரங்களை கட்டணமில்லாமல் புதுப்பிக்க டிச.14ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஆதார் அட்டையில் உங்கள் விவரங்களை கட்டணமில்லாமல் திருத்திக் கொள்ள செப்டம்பர் 14-ஆம் தேதி கடைசி நாளாகும். அதற்கு பிறகு, ஆன்லைனில் திருத்தங்களை மேற்கொள்ள ரூ.25, நேரில் மேற்கொள்ள ரூ.50 கட்டணம் பெறப்படும். தகவல்களை புதுப்பிக்க, ஜூன் 14-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கு காலக்கெடு மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மக்களின் சமீபத்திய அடையாளச் சான்றையும், முகவரிச் சான்றையும் பதிவு செய்ய இந்திய ஆதார் ஆணையம் அறிவுறுத்தி வருகிறது. ஆதார் அட்டை தேவைப்படும் அலுவலகங்கள் மற்றும் விண்ணப்பங்களில், பழைய புகைப்படம் அல்லது பழைய முகவரி காரணமாக ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்க இந்தத் தரவுகளை புதுப்பிக்கப் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் ஆதார் விவரங்களை 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ஆன்லைனில் இலவசமாக புதுப்பிக்க அனுமதிக்கிறது. ஆவணம் புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதிசெய்வதற்காக எந்தவொரு கட்டணமும் இல்லாமல் தங்கள் அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆவணங்களைப் புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆதார் என்பது பயோமெட்ரிக் மற்றும் மக்கள்தொகை தகவல்களின் அடிப்படையில் இந்திய மக்களுக்கு வழங்கப்படும் 12 இலக்க தனித்துவமான அடையாள எண்ணாகும். ஆதார் ஒரு நபரின் கண்விழி, கைரேகை ஆகிய பயோமெட்ரிக் தகவல்களுடன் இணைக்கப்பட்டிருப்பதால், போலி மற்றும் பொய் அடையாளங்களைக் கண்டறிவதன் மூலமும் குடியிருப்பாளர்களிடையே நகல் எண்களைத் தடுக்கிறது. 

எந்தவொரு குடியிருப்பாளருக்கும் நகல் எண் இருக்கக்கூடாது, ஏனெனில் இது அவர்களின் தனிப்பட்ட பயோமெட்ரிக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது, மோசடி மற்றும் பொய் அடையாளங்களை அடையாளம் காணும். ஆதார் விவரங்களைப் புதுப்பிப்பது பல்வேறு அரசு சேவைகளைத் தொடர்ந்து பெறுவதற்கு அவசியமாகும். இந்த 12 இலக்க ஆதார் எண், பல சேவை இணையதளங்களில் அடையாளச் சரிபார்ப்புக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

ஆதார் பதிவு மற்றும் புதுப்பிப்பு விதிமுறைகள், 2016-இன் படி, தனிநபர்கள் தாம் ஆதார் பதிவு செய்த தேதியிலிருந்து ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் தங்கள் அடையாளச் சான்று மற்றும் பி.ஓ.ஐ ஆவணங்களை (Proof of Identity - PoI Document) புதுப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். ஐந்து மற்றும் 15 வயதில் நீல ஆதார் அட்டையில் புதுப்பிக்க வேண்டிய குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களுக்கும் இந்த விதி பொருந்தும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital






New Shape Tailors



Thoothukudi Business Directory