» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சைக்கோ தலைவரால் சீரழிந்த ஆந்திர மாநிலம்: சந்திரபாபு நாயுடு சரமாரி குற்றச்சாட்டு!

சனி 24, ஆகஸ்ட் 2024 5:49:30 PM (IST)

ஆந்திர மாநிலம் கடந்த 5 ஆண்டுகளில் மனநலம் பாதிக்கப்பட்ட தலைவரால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது' என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு விமர்சித்துள்ளார்.

ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் அசுர பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைத்தார் சந்திரபாபு நாயுடு. இந் நிலையில், ஆந்திர மாநிலம் 5 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட தலைவரால் ஆளப்பட்டதாகவும், அவரது ஆட்சியில் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் விமர்சித்துள்ளார். கோதபேட்டா தொகுதிக்கு உட்பட்ட வனப்பள்ளியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் நாயுடு பேசுகையில் ஜெகன் மோகன் ரெட்டியை இவ்வாறு குற்றம்சாட்டி பேசி உள்ளார்.

அவர் மேலும் பேசியதாவது: மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று ஜெகன் மோகன் ரெட்டி விரும்பினார். ஆனால் அப்படி அவர் வந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். மாநிலத்தையும், அனைத்து கிராம பஞ்சாயத்துகளையும் முன்னேற்றுவது எங்கள் கடமை. பஞ்சாயத்துகளை முன்னேற்றுவதற்காக ரூ.900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அடுத்த கட்டமாக ரூ.1,100 கோடி ஒதுக்கீடு செய்ய உள்ளோம். கடந்த ஆட்சியில் தெருவிளக்குகள் திருடப்பட்டன. ஆனால் நாங்கள் இப்போது வீணாகும் பொருட்களில் இருந்தும் வட வருமானத்தை உருவாக்க முயற்சி எடுத்து இருக்கிறோம்.

தினசரி கூலித் தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்தப்படும். தேர்தலுக்கு முன்பாக ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித்தருவதாக உறுதி அளித்து இருந்தோம். வனப்பள்ளி கிராமத்தில் 600 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும். அனைத்து பகுதிகளுக்கும் சாலை வசதி செய்து தரப்படும். இலவச கேஸ் சிலிண்டர்கள் அனைத்து தரப்பினருக்கும் விரைவில் விநியோகிக்கப்படும். கிட்டத்தட்ட சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணிகளில் 40% முடிந்துவிட்டது. அனைத்து கிராமங்களிலும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் சாலை வசதி ஏற்படுத்தப்படும் என்று பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

New Shape Tailors







Thoothukudi Business Directory