» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ்: தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

வியாழன் 22, ஆகஸ்ட் 2024 5:31:25 PM (IST)

குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கர்  கைது செய்யப்பட்டது தாெடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பெண் போலீசை அவதூறாக பேசியது, கஞ்சா வைத்திருந்தது உள்பட மொத்தம் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கோவை, கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி, திருச்சி, சென்னை உள்பட பல இடங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

இதனையடுத்து அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மீண்டும் சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இந்த முறை தேனி போலீசார் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

இதற்கிடையே, சவுக்கு சங்கர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தன் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம் போடப்பட்டது தொடர்பாக வழக்கறிஞர்கள் முறையிட்டனர்.

இதையடுத்து, குண்டர் சட்டம் போடப்பட்டதை எதிர்த்து நேரடியாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி அளித்தனர். இந்த நிலையில், சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் விசாரணையை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital





New Shape Tailors




Thoothukudi Business Directory