» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்திரா காந்தியை மம்தாவை சுட்டுக் கொல்ல வேண்டும்: மிரட்டல் விடுத்த மாணவர் கைது!

திங்கள் 19, ஆகஸ்ட் 2024 3:57:59 PM (IST)

இந்திரா காந்தியை சுட்டு கொலை செய்தது போலவே முதல்வர் மம்தாவை கொலை செய்ய வேண்டும் என்று கருத்து வெளியிட்ட மாணவரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் கடந்த 9-ந்தேதி ஆடிட்டோரியத்தில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

இந்த கொலை தொடர் பாக போலீசில் தன்னார்வ தொண்டராக பணியாற்றிய சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். கொலையுண்ட பெண் டாக்டரின் தந்தை கூறுகையில், "எனது மகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள சஞ்சய் ராய் உண்மையான குற்றவாளி கிடையாது. கொலைக்கு பின்னால் மிகப்பெரிய கும்பல் இருக்கிறது.

கொல்கத்தா பெண் டாக்டரின் மரணத்துக்கு நீதி கேட்டு 11-வது நாளாக மேற்கு வங்க மாநிலம் முழுவதும் டாக்டர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கிர்த்தி சர்மா என்ற இளைஞர் பி.காம் 20ம் ஆண்டு படித்து வருகிறார். அவரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் மருத்துவர் கொலை தொடர்பாக பதிவிட்டிருந்தார்.

அவரது பதிவில், இந்திரா காந்தியை சுட்டு கொலை செய்தது போலவே முதல்வர் மம்தா பானர்ஜியை கொலை செய்ய வேண்டும் என்ற பதிவிட்டிருந்தார். இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட மாணவரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital





New Shape Tailors




Thoothukudi Business Directory