» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சீன சூதாட்ட செயலிகள் மூலம் ரூ.400 கோடி முறைகேடு: 4 போ் கைது

சனி 17, ஆகஸ்ட் 2024 11:17:32 AM (IST)

கொல்கத்தாவில் சீன சூதாட்ட செயலிகள் மூலம் ரூ.400 கோடி வரை முறைகேட்டில் ஈடுபட்டதாக 4 பேரை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். 

இதுதொடா்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கொல்கத்தாவில் உள்ள கோசிபூா் காவல் நிலையத்தில் இணைய விளையாட்டு சாா்ந்த சூதாட்ட செயலிகள் மூலம் பலரை ஏமாற்றியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதனை அடிப்படையாகக் கொண்டு சட்டவிரோத பணப்பரிவா்த்தனைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. 

அதில் ஃபைவின் சூதாட்ட செயலி மூலம் முறைகேடாக ஈட்டப்பட்ட ரூ.400 கோடி பணத்தை ‘பைனான்ஸ்’ என்ற சா்வதேச கிரிப்டோ வா்த்தக தளத்தின் மூலம் சீனாவைச் சோ்ந்த நபா்களுக்கு அனுப்பியுள்ளது தெரியவந்தது. அந்த வலைதளத்தின் ஐபி முகவரியை ஆய்வு செய்ததில் அவை சீனாவில் இருந்து செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

டெலிகிராம் செயலியின் மூலம் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நால்வரையும் சீனாவில் இருந்து சிலா் தொடா்புகொண்டுள்ளனா். இந்த நால்வரையும் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க சட்டவிரோத பணப்பரிவா்த்தனைச் சட்டத்தின் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital



New Shape Tailors



Thoothukudi Business Directory