» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் : அக்.4-ல் வாக்கு எண்ணிக்கை!
வெள்ளி 16, ஆகஸ்ட் 2024 4:44:25 PM (IST)
ஜம்மு - காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் 3 கட்டங்களாக செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது. அக் .4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியாணா மாநிலங்களுக்கு பேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புது டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார்மற்றும் டாக்டர் சாந்து ஆகியோர் தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டனர்.
அதில், ஜம்மு -காஷ்மீருக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஹரியாணாவுக்கு அக்டோபர் 1ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும், அக்டோபர் 4ஆம் தேதியே ஹரியாணாவிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பு மக்களும் தேர்தலில் தங்களது பங்களிப்பைக் கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். ஜம்மு - காஷ்மீருக்கு விரைந்து தேர்தலை நடத்த வேண்டும் என கட்சிகள் கோரிக்கை வைத்தன. ஜம்மு-காஷ்மீரில் 3.71 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் வாக்களிக்கவிருக்கிறார்கள். ஜம்மு-காஷ்மீரில் 11,838 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவிருக்கின்றன.
சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீர் பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்படுகிறது.90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணா சட்டப்பேரவைக்கும் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படவிருக்கிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு - காஷ்மீரில் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.