» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினம்: குடியரசுத் தலைவர், அமைச்சர்கள் அஞ்சலி!
வெள்ளி 16, ஆகஸ்ட் 2024 11:25:52 AM (IST)
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 6 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி டெல்லியிலுள்ள ‘சதைவ் அடல்’ நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.மேலும், இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜெபி நட்டா, உயர்கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ராஜ்நாத் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினத்தில் அவருக்கு அஞ்சலிகள். நாட்டை முன்னேற்றியதில் அவர் ஆற்றிய ஈடுஇணையற்ற பங்களிப்பிற்காக மக்களால் நினைவுகூரப்படுகிறார். மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதில் அவர் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். இந்தியாவுக்கான அவருடைய தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற நாம் தொடர்ந்து பாடுபடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.